கோலமாவு கோகிலா’. திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலிப்குமார். அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து ’டாக்டர்’ படத்தை இயக்கினார். இந்த இரு படங்களும் நெல்சனுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.
அனைவரும் நெல்சன் இயக்கிய முதல் படம் கோலமாவு கோகிலா என்றுதான் நினைக்கக்கூடும், ஆனால், அதற்கு முன்பே சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கினார். சில மாதங்கள் படப்பிடிப்பு நடைப்பெற்ற நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் தடைப்பட்டு வெளியாகாமல் போனது.
தற்போது, அந்தப் படத்தை மீண்டும் கையில் எடுக்க சிம்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நெல்சன் இயக்கவிருக்கும் ரஜினிகாந்த்தின் 169-வது படத்தை 6 மாதத்தில் முடித்து விட்டு சிம்புவை வைத்து மீண்டும் வேட்டை மன்னன் படத்தை துவங்க நெல்சன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.