விஜய் நடிக்கும் 65-வது படத்தில் பெயர் ‘பீஸ்ட்’ (BEAST)

By Ezhumalai

 ‘மாஸ்டர்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 65-வது படத்திற்கு ‘பீஸ்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுவதையொட்டி இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ‘கோலமாவு கோகிலா’படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இப்படத்தை இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும், யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் போன்றோர் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். 

ஜார்ஜியாவில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தமிழகத்தஊரடங்கு தளர்வில் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், படப்பிடிப்பு விரைவில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டில்தான் வெளியாகும் வாய்ப்புள்ளது. 

.
மேலும்