வித்தைக்காரன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

By News Room

White Carpet Films சார்பில், K விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், சதீஷ் நாயகனாக நடிக்கும், வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படம்  “வித்தைக்காரன்”. ப்ளாக் காமெடியில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 23 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில்,  திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.  

 

இந்நிகழ்வினில்..

 

தயாரிப்பாளர்  K விஜய் பாண்டி பேசியதாவது.. 

எங்களின் இந்த திரைப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். என் முதல் படம் தேஜாவு அதற்கு நல்ல ஆதரவு தந்தீர்கள். அதே போல் இந்த படத்திற்கும் நல்ல  ஆதரவு தாருங்கள் நன்றி. 

 

நடிகர் சதீஷ் பேசியதாவது…

என் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. தமிழக மக்கள் என்னை ஹீரோவாக ஏற்றுக்கொண்டு படம் பார்த்ததற்கு நன்றி. தளபதி விஜய் சார் தான் இந்த படத்தை துவங்கி வைத்தார். அவருக்கு என் முதல் நன்றி. என்னைச் சமீபத்தில் சந்தித்த போது கான்ஜூரிங் கண்ணப்பன் பார்த்ததாகச் சொன்னார். அவர் பாராட்டியது மிகப்பெரிய சந்தோஷம். இயக்குநர் வெங்கி தளபதி விஜய்யின் தீவிர ரசிகர். ‘V’ செண்டிமெண்ட் எங்களுக்கு ஒர்க் அவுட் ஆகி வருகிறது. படம் ஆரம்பித்து வைத்த விஜய் சார், இயக்குநர் வெங்கி, பட டைட்டில் வித்தைக்காரன் என எல்லாம் ‘V’ தான். இப்படம் வெற்றியாக அமையுமென நம்புகிறேன். ஆனந்தராஜ் சார், இயக்குநர் சுப்பிரமணிய சிவா என எல்லோரும் நல்ல ரோல் செய்திருக்கிறார்கள். ஆனந்தராஜ் சாரை எல்லாம் சின்ன வயதில் பார்த்து பயந்திருக்கிறேன். இப்போது அவருடன் நடிப்பது மகிழ்ச்சி. சிம்ரன் குப்தா தமிழே தெரியாமல், டயலாக் மக்கப் பண்ணி அத்தனை அர்ப்பணிப்புடன் நடித்தார், அவருக்கு வாழ்த்துக்கள். இந்தப் படம் நல்ல ஒரு முயற்சியாக செய்துள்ளோம். எங்களை நம்பிய தயாரிப்பாளருக்கு நன்றி. தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி. 

 

இயக்குநர் வெங்கி பேசியதாவது.. 

இந்தக் கதையை வைத்துக் கொண்டு, நிறைய தயாரிப்பாளரிடம் அலைந்திருக்கிறேன். ஆனால் தயாரிப்பாளர் விஜய் சாரிடம் கதை சொன்ன உடனே ஓகே சொல்லி விட்டார். அவருக்கு நன்றி. தயாரிப்பாளர் நான் கேட்ட அனைத்தையும் தந்தார். படம் பார்த்தால் உங்களுக்கு தெரியும். சதீஷ் பல காலமாக நண்பர், ஹீரோவாகிவிட்டார். இந்தக் கதை சொன்னேன் அவருக்குப் பிடித்திருந்தது. உடனே ஒத்துக் கொண்டார். நண்பன் யுவாவுடன் மாஸ்டர் படத்தில் வேலை செய்தேன். இந்தப் படம் செய்கிறேன் என்றேன் வந்துவிட்டார். இந்தப் படத்திற்காக நிறைய உழைத்துள்ளார். இந்தப்படத்திற்கு ஐடியா தந்ததிலிருந்து நிறையப் பங்கெடுத்த நண்பன் கார்த்திக்கு நன்றி. சிம்ரன் குப்தா என் படத்தின் கதாபாத்திரத்திற்கு மிகச்சரியாக இருந்தார். சுத்தமாக தமிழ் தெரியாது ஆனால் டயலாக்கை தயார் செய்து கொண்டு மிக அர்ப்பணிப்போடு செய்தார்.  நடித்த அனைவரும் நன்றாக செய்துள்ளனர். நானும் இந்த படத்தில் ஒரு சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் நிறையப் புதுமுகம் தான் வேலை செய்துள்ளனர். அனைவருக்கும் என் நன்றிகள். என் டைரக்சன் டீம், 10பேர் என் கோபத்தைப் பொறுத்துக்கொண்டு வேலை செய்தனர். அனைவருக்கும் நன்றி. படம் உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன். நன்றி. 

 

ஒளிப்பதிவாளர் யுவ கார்த்திக் பேசியதாவது.. 

இந்த படத்தில் பணிபுரிந்தது மிக மகிழ்ச்சி. என் குருநாதர் சத்யா சாருக்கு நன்றி. தயாரிப்பாளர் மற்றும் சதீஷ் இருவரும் எனக்கு மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள், அவர்களுக்கு நன்றி. இயக்குநருக்கு என் நன்றிகள். படத்தில் என்னுடன் வேலை பார்த்த என் உதவியாளர்கள் சக தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. 

 

எடிட்டர் அருள் E சித்தார்த் பேசியதாவது.. 

இந்த நிறுவனத்தில் தொடர்ந்து படம் செய்து வருகிறேன். என்னுடன் வேலை பார்த்த என் உதவியாளர்கள் சக தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் அண்ணா அடுத்த படத்திற்கும் வாய்ப்பு தாருங்கள். படம் உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன். 

 

நடிகர் ரகு பேசியதாவது… 

வெங்கி பிரதர் விஜய் சார் இருவருக்கும் நன்றி. இந்தப்படம் உண்மையில் ஒரு மேஜிக்காக இருக்கும். எனக்கு வாய்ப்பளித்ததற்கு இயக்குநருக்கு நன்றி. அனைவருக்கும் படம் பிடிக்குமென நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி. நடிகை தாரணி பேசியதாவது.. ஒரு டீமாக அனைவரும் எனக்கு சப்போர்டிவாக இருந்தார்கள். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.  

 

நடிகர் மதுசூதனன் பேசியதாவது.. 

விஜய் சார் நீங்கள் தொடர்ந்து படம் செய்ய வேண்டும். நான் தொடர்ந்து நடிக்க வேண்டும். தயாரிப்பாளர் நன்றாக இருந்தால் தான் நடிகர்கள் நன்றாக இருக்க முடியும். இந்தப் படம் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. இந்தப் படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் நன்றி. 

 

இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசியதாவது.. 

இங்கு வந்து பேசிய அனைவரும் நன்றியுணர்வுடன் பேசினார்கள். அனைவருக்கும் நன்றி. இயக்குநர் வெங்கி நல்ல நண்பர். திருடர்கள் கதை சமூகத்திற்கே அவசியமான கதையாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் கடவுளுக்கே பூட்டு போட வைத்து விடுகிறார்கள். வெங்கி நல்லதொரு திருடர்கள் கதையாக இந்த படத்தை எடுத்திருக்கிறார். சினிமாவுக்கு புதிதாக வருகிறவர்கள் தான் சினிமாவை மாற்றுகிறார்கள், அதே போல் விஜய் பாண்டி நல்ல படங்களைத் தர வேண்டும். டான்ஸ், பாட்டு எல்லாம் தெரிந்த நம்ம சதீஷ் ஹீரோவாக வருவது மகிழ்ச்சி. ஒரு நல்ல படத்தைப் படக்குழு தந்துள்ளார்கள். “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” எனும் குறள் சொல்லி முடித்துக் கொள்கிறேன், நன்றி. 

 

நடிகை சிம்ரன் குப்தா பேசியதாவது.. 

தயாரிப்பாளர் விஜய் சார், இயக்குநர் வெங்கி ஆகியோருக்கு நன்றி. வித்தைக்காரன் எனக்கு முக்கியமான படம். எனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக கருதுகிறேன். எனக்கு ஆதரவு தந்த சதீஷ்க்கு நன்றி. வித்தைக்காரன் கண்டிப்பாகச் சிறந்த வெற்றி படமாக இருக்கும்; நன்றி.  

 

ஒரு கொள்ளையும் அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்களுமாக, முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி கலந்த திரைக்கதையில், வித்தியாசமான காமெடித் திரைப்படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் வெங்கி. 

 

காமெடி நடிகராக அறிமுகமாகி வெற்றிகரமான நாயகனாக வலம் வரும் சதீஷ் இப்படத்தில் நாயகானாக நடித்துள்ளார். நாயகியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், மதுசூதனன் ராவ், சுப்பிரமண்ய சிவா, ஜான் விஜய், ஆஷிஃப் அலி, பாவெல், ஜப்பான் குமார், சாம்ஸ், சாமிநாதன், மாரிமுத்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

தொழில் நுட்ப குழு 

தயாரிப்பாளர் - K விஜய் பாண்டி 

எழுத்து இயக்கம் - வெங்கி

ஒளிப்பதிவு - யுவ கார்த்திக்

இசை - வி பி ஆர் 

எடிட்டர் - அருள் E சித்தார்த்

கலை இயக்கம் - G துரை ராஜ் 

சண்டைப்பயிற்சி - ஸ்டன்னர் சாம் 

மக்கள் தொடர்பு - சதீஷ்  (AIM)

.
மேலும்