நண்டு குழம்பு செய்வது எப்படி?

By News Room

தேவையானவை:

நண்டு – 2 வெங்காய பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது) பிரியாணி இலை – 2 பட்டை – 1 கிராம்பு – 5 ஏலக்காய் – 4 சீரகம் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 1 கப்

செய்முறை: முதலில் நண்டுகளை சுத்தம் செய்து, நீரில் நன்கு அலசிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி நண்டுகளைப் போட்டு 8-10 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்பு அதனை இறக்கி, நண்டுகளை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொண்டு, நீரை கீழே ஊற்றிவிடாமல் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் அதில் வெங்காய பேஸ்ட் சேர்த்து 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கி விட்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அடுத்து நறுக்கி வைத்துள்ள தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

பின்பு அத்துடன் வேக வைத்துள்ள நண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி, தீயை குறைவில் வைத்து, 7-8 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். இறுதியில் தனியாக எடுத்து வைத்துள்ள நீரை அதனுடன் ஊற்றி, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சூப்பரான பெங்காலி நண்டு குழம்பு ரெடி.

.
மேலும்