வெங்காய பக்கோடா செய்வது எப்படி?

By News Room

தேவையானவை:

1.    மைதா   -   50 கிராம் 2.    அரிசி மாவு    -   100 கிராம் 3.    கடலை மாவு    -   100 கிராம் 4.    வெண்ணெய்    -   2 டீஸ்பூன் 5.    பச்சை மிளகாய்   -    4 (நறுக்கியது) 6.    வெங்காயம்   -    2 (நறுக்கியது) 7.    உப்பு    -   தேவைக்கேற்ப 8.    எண்ணெய்   -    தேவைக்கேற்ப

செய்முறை:

இட்லி பாத்திரத்தில் மைதா மாவைப் போட்டு, ஆவியில் சிறிது நேரம் வேக வைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணெய், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பக்கோடா மாவுபதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்பு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக பக்கோடா போன்று பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது மொறுமொறுப்பான சூடான மைதா பக்கோடா ரெடி!!!

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். இந்த பக்கோடாவை டீ, காப்பி குடிக்கும் போது சாப்பிடலாம்..

.
மேலும்