சென்னா மசாலா செய்வது எப்படி?

By News Room

முதலில் 10 முதல் 12 மணி நேரத்திற்கு முன்பாகவே ஒரு கப் சென்னாவை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் நன்கு ஊறி இருக்கும் சென்னாவை மீண்டும் ஒருமுறை கழுவி குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் அதேபோல் பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு சிறிய துண்டு இஞ்சி, 10 பல் வெள்ளை பூண்டு, இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த விழுதுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக சிறிய துண்டு பட்டை இரண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 2, பிரியாணி இலை ஒன்று, அண்ணாச்சி பூ ஒன்று சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இப்பொழுது மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

அதற்காக ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா, அரை தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக கைப்பிடி அளவு சிறிய வெண்ணெய் துண்டு ஒன்று சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

இப்பொழுது ஒரு தேக்கரண்டி மல்லித்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலந்து கொடுத்து குக்கரை முடிவிட வேண்டும். குறைந்தது மூன்று விசில்கள் வரும் வரை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

குக்கரின் அழுத்தம் குறைந்தபின் திறந்து பார்த்தால் சுவையான சென்னா மசாலா தயார். இந்த சென்னா மசாலா செய்வதற்கு குறைந்தது 5 முதல் 10 நிமிடங்களை போதுமானது. மேலும் இந்த சென்னா மசாலா பூரி, சப்பாத்தி, பரோட்டா இவற்றிற்கு மட்டுமல்லாமல் சூடான சாதத்திற்கும் சிறந்த பொருத்தமாக இருக்கும்.....

.
மேலும்