வாழைக்காய் கட்லெட் செய்வது எப்படி?

By Tejas

தேவையானவை:

 

வேக வைத்து, மசித்த வாழைக்காய் – 2 கப்,

பிரெட் ஸ்லைஸ் – 4,

வறுத்துப் பொடித்த வேர்க்கடலை – கால் கப்,

நறுக்கிய பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன்,

பொடித்த அவல் – 1 கப்,

பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டீஸ்பூன்,

நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை:

 

சிறிதளவு தண்ணீரில் பிரெட் ஸ்லைஸை ஒவ்வொன்றாக அமிழ்த்தி நன்றாகப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். அவற்றுடன் மசித்த வாழைக்காய், பொடித்த வேர்க்கடலை, வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வட்டம், சதுரம் என பிடித்த வடிவங்களில் செய்து, அவல் பொடியில் இருபுறமும் புரட்டவும்.

 

கடாயில் எண்ணெய் விட்டு, தயார் செய்தவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்து எடுக்க… வாழைக்காய் கட்லெட் ரெடி.

.
மேலும்