ஆறுதலான வருடல்கள் வலியைக் குறைக்குமா?

By News Room

வலியிருக்குமிடத்தில் ஆறுதலாக யாராவது தடவிக் கொடுத்தால் அது இதமாகவும் வலியைக் குறைப்பதாகவும் தெரிவது பொய்யல்ல, அது நிஜம் என்று ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

இதமாக வருடும் உணர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்வதற்கென்றே நரம்புகள் தனியாக இருக்கின்றன என்று கண்டுபிடித்தனர். இந் நரம்புகள் வலியிருக்கும் இடத்திலிருந்து வலி உணர்வை கொண்டு செல்லும் நரம்புகளால் தடை செய்யப்படுவதில்லை, மாறாக இந்த தொடுஉணர்வு நரம்புகள் வலி நரம்புகளை தடை செய்கின்றன.

 

அன்பு, பரிவுடன் இதமாகத் தொட்டு தடவிக் கொடுத்தால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல எல்லா வயதினருக்கும் வலி பறந்துவிடும். இதைவிட மலிவான மருந்து என்ன இருக்கிறது.

.
மேலும்