சருமம் ஜொலிக்க சோற்று கற்றாழை - சளியைத் விரட்ட தூதுவளை!

By saravanan

சளியைத் விரட்டும் தூதுவளை:

தூதுவளை இலைகள் சளியால் ஏற்படும் தொண்டை வலிக்கு மிகச் சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. கபத்தை உடைக்கும் தன்மை உடையது. இதனை சாப்பிட்டால் நல்ல உடல் வனப்பும், கட்டான உடலமைப்பும் பெறுவர். தூதுவளை மூல நோய்க்கு நல்ல மருந்தாகும். அதிக உஷ்ணம் கொண்டதால் வாரம் ஒரு நாள் சாப்பிடலாம். இதனை தண்ணீரில் போட்டு காய்ச்சி, வடிகட்டி, அந்த தண்ணீரை பருகி வந்தால், இருமல் குணமாகும்.

சருமம் ஜொலிக்க சோற்று கற்றாழை: சோற்றுக் கற்றாழையின் ஜெல் சருமத்தை பளபளப்பாக்க வைக்கவும், முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி, முகப்பருக்களை நீக்கவும் உதவுகிறது.

கற்றாழை ஜெல்லுடன் 10 சொட்டு பாதாம் எண்ணெய் விட்டு முகத்தில் தடவி வந்தால் வறண்ட சருமம் வராது.  கிளிசரின் ஒரு டீஸ்பூன், எலுமிச்சை பழ எண்ணெய் இரண்டு சொட்டு ஆகியவற்றுடன், கற்றாழை ஜெல்லை (Aloe vera gel)சேர்த்து முகத்தில் தடவினால் சருமம் மிருதுவாகும்.

.
மேலும்