ஆப்பிள் பழங்களை தோல் நீக்கி சாப்பிட்டால்?

By News Room

ஆப்பிள் பழங்களை தோல் நீக்கி சாப்பிடுவது தவறுதான்.  

ஆப்பிளை நன்கு கழுவி சுத்தம் செய்து தோலோடு தான் சாப்பிட வேண்டும்.ஆப்பிள் பழத்தை விட, அதன் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளனவாம்.பழத்தின் சதைகளை விட இரண்டு முதல் ஆறு மடங்கு ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்ததாம்.இதனால் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தருகிறது.

ஆப்பிள் தோலில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது.ஒரு ஆப்பிளின் தோலில் மட்டும் சராசரியாக 8.4 மி.கி. வைட்டமின் சி உள்ளது.ஆப்பிளின் தோலில் புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்ட ட்ரைடர்பெனாய்டுகள் எனப்படும் சேர்மங்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  இந்தச் சத்துக்களை நாம் அடைய விடாமல் வியாபாரிகள்தான் தடுக்கிறார்களே.

இப்போதெல்லாம் ஆப்பிள் பழத்தை புதுசு போல் பளபளப்பாக காண்பிக்க அதன்மீது மெழுகு அல்லது தேன்மெழுகுப்பூச்சு பயன்படுத்தி, நாள்பட குளிர்பதன அறைகளில் வைத்திருந்து விற்பனைக்கு வருகிறது. இந்த மெழுகு உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.  இதனால் இன்றைய நாளில் ஆப்பிள் பழத்தை தோல் சீவித்தான் சாப்பிட வேண்டியுள்ளது.  

நான் தோலையும் சீவி விட்டு, மீண்டும் அதை ஒரு முறை கழுவிவிட்டுதான் சாப்பிட கொடுப்பேன்.

.
மேலும்