மாதவிடாய்காலத்தில் பெண்களுக்கு அறுகம்புல் தரும்?

By nandha

சில சமயங்களில் திடீர் என உங்களுக்கு மூக்கில் இருந்து ரத்தம் சொட்டுகின்ரதா அதற்கு அறுகம்புல் சாற்றை எடுத்து மூன்று சொட்டு விடுங்கள் ரத்தம் சொட்டுவது நின்று விடும்.

அறுகம்புல்லைப் பிடுங்கியவுடன் சுத்தப்படுத்தி இடித்து அதன் சாற்றை எடுத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் எந்த நோயும் நெருங்காது.

அது மட்டும் இன்றி இதன் சாறு சித்த மருத்துவத்திற்கு இன்றி அமையாத ஒன்றாகத் திகழ்கின்றது அறுகம்புல் சாற்றில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளது இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறும் அத்துடன் குழந்தைகளுக்குப் பாலிலும் கலந்து குடிக்கலாம்.

நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அறுகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.

கண் எரிச்சலுக்கு ஒவ்வொரு கண்ணிலும் இரண்டு சொட்டு அறுகம்புல் சாற்றைப் பிளிந்து விட்டால் கண் எரிச்சல் நின்று விடும்.

மாதவிடாய் காலங்களில் அவதிப்படும் பெண்கள் காலையில் ஒரு டம்ளர் அறுகம் பபுல் சாற்றில் சிறிதளவு மிளகுத் தூளையும் சேர்த்துப் பருகி வந்தால் சில மாதங்களிலேயே அப்பிரச்சனைகளில் இருந்து உங்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

உங்களுக்குத் தேவையான அளவு அறுகம்புல்லை எடுத்து சிறிதளவு மஞ்சள சேர்த்து அரைத்து உடலில் பூசி சில மணி நேரம் கழித்துக் குளித்து வந்தால் சொறி, சிரங்கு, அடங்காத தோல் நோய், வியர்குரு, தேமல், சேற்றுப்புண், அரிப்பு, நீர்க் கட்டிகள் இல்லாது போகும்.

சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் அறுகம்புல்லை சில நாட்களுக்கு ஊற வைத்து பின்னர் வாரத்திற்கு ஒரு முறை நீங்கள் குளிக்கும் போது தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் உடல் வெப்பம் பித்தம் வாதம் வயிறு எரிச்சல் நெஞ்சுவலி தலைச்சூடு நீர்க்கடுப்பு மூலக்கொதி என்பன தீரும். அறுகம்புல் சாற்றை தேனில் கலந்து காலை மாலை இரு வேளையாகத் தொடர்ந்து ஒரு சில மாதங்கள் பருகி வந்தால் உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

அறுகம்புல் வேப்பிலை இரண்டையும் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து வடிகட்டிக் குடித்து வர தாங்க முடியாத வயிற்று வலி சுகமாகும்.

அறுகம்புல்லும் அதன் வேரையும் சம அளவு எடுத்து சிறிதளவு மிளகு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி பின்னர் அதனுடன் பனம்கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் குணமாகும்.

அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அருகம்புல் சாறு எடுத்து தினமும சாப்பிட்ட பின்பு தொடர்ந்து பருகி வந்தால் கை கால் நடுக்கம், வாய் உளறல் போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.கண் பார்வை தெளிவடையவும், கண்ணின் சிவப்புத் தன்மை மாறவும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகும்.

ஞாபக சக்தியை விருத்திப்படுத்துவதற்கும் இதன் சாறு பயன் மிக்கது அது மட்டும் இன்றி குடற்புண்ணை ஆற்றும் உடல்வலியை நீக்கும், மலச் சிக்கல் நீங்கும்,

குருதிச் சோகை மற்றும் குருதி அழுத்தததையும் சீராக்கும் குருதியிலுள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும், கண் நோய் மற்றும் சளி போன்ற பிரச்சனைகளுக்கும் இது ஓர் சிறந்த மருத்துவப தன்மை வாய்ந்த புல் என்பதில் மிகையாகாது.

இலவச வரன் பதிவுக்கு கணேசன் மேட்ரிமோனி ganesanmatrimony.com

.
மேலும்