அத்திப்பழத்தில் உள்ள அழகு குறிப்புகள் தெரியுமா?

By saravanan

அத்திப்பழத்தில் விட்டமின்ஸ்,மினரல்ஸ்,ஃபைபர் என பலவகையான சத்துக்கள் உள்ளது. 

தினமும் சாப்பிட்டால் நம் சருமத்திற்கும் அதிக நன்மைகள் உண்டு.

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை தடுக்கும். இரண்டு அத்திப்பழங்களை எடுத்து பேஸ்டாக அரைத்துக் அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை காத்திருந்து பிறகு முகத்தை வாஷ் செய்துகொள்ளலாம். ஒரு வாரத்துக்கு 3 முறை இப்படி செய்தால் முகப்பொலிவு ஏற்படும்.

அத்திப்பழத்தை அரைத்து பேஸ்ட்டாக்கி அதனுடன் 3 சொட்டு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்துகொள்ளலாம்.

அத்திப்பழத்தில் அதிகப்படியான விட்டமின் சி இருப்பதால் சூரிய கதிர்வீச்சினால் உண்டான நிற மாற்றங்களை தடுக்க நமக்கு உதவும்.

அத்திப்பழம் பேஸ்ட் ஒரு ஸ்பூன்,  தயிர் மற்றும் சிறிதளவு தேன் மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பின்னர் கழுவி விட்டால் முகப்பொலிவு கிடைக்கும். 

அத்திப்பழத்தில் ஃபைபர்  அதிகம் உள்ளதால் ஒருநாள் முன்னரே இரவே தண்ணீரில் ஊற  சாப்பிடுங்கள். உடலில் இருக்கும் நச்சுக்கள் எளிதாக வெளியேறிவிடும்.

தலைமுடியின் வளர்ச்சிக்கும் அதிக பலன் அளிக்கும் ம் துணை நிற்கும் விட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் அத்திப்பழத்தில் உள்ளதால், தினமும் 2 முதல் 3 அத்திப்பழங்களை சாப்பிட்டு வர முடி உதிர்தலை தடுக்க முடியும். 

.
மேலும்