இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு மற்றும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை மத்திய, மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினியைக் கொண்டு கழுவ வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை அரசு வழங்கியுள்ளது.
அதேபோல் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தி; கொரோனா தொற்றுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்திதான் பக்கபலம்.
நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிச் செய்ய எதையெல்லாம் சாப்பிட வேண்டும்?
1. முழு தானியங்களான கோதுமை, கேழ்வரகு, கொண்டைக்கடலைச் சாப்பிடலாம்.
2. உடலில் புரதச்சத்தை அதிகரிக்க கோழிக்கறி, மீன், முட்டை சாப்பிடலாம்.
3. சோயா, பாதாம், பிஸ்தா, நிலக்கடலை, முந்திரி சாப்பிடலாம்.
4. ஆரோக்கியமான கொழுப்பு உணவுக்கு தேங்காய் எண்ணெய், சோயா எண்ணெய், மீன் சாப்பிடலாம்.
5. நாள்தோறும் உணவில் காய்கறிகளைக் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
6. மஞ்சள் கலந்த பாலைக் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
7. இரவு ஊற வைத்த பாதாம், உலர்ந்த திராட்சையை காலையில் சாப்பிட வேண்டும்.
8. காலையில் கேழ்வரகு தோசை, கொண்டைக்கடலை, பச்சைப் பட்டாணி, பச்சைப் பயிறு சாப்பிடலாம்.
9. மதிய உணவில் காய்கறிகளையும், வெல்லம், நெய்யைச் சேர்த்துக் கொள்ளலாம்.
முதலில் நமக்கு மூக்கு பகுதியில் மறைந்திருப்பது, பின்னர் நுரையீரல் பாதிக்கிறது. கொதிக்க வைத்த நீரை கொண்டு ஆவிப் பிடிப்பது நல்லப் பலனைத் தரும். நாள்தோறும் குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருக்க வேண்டும். வாழை, எலுமிச்சை , பூண்டு, ஆரஞ்சு, அன்னாசியை அடிக்கடி சாப்பிட வேண்டும். என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றன.