உடல் பலவீனம் நீங்க ஹெல்த் டிப்ஸ்

By News Room

மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையை பொடி செய்து இதில் ஐந்து கிராம் எடுத்து தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் பாலுடன் கலந்து பருகி வர உடல் பலவீனம் நீங்கும் உள்ளுறுப்புகள் பலம் பெரும் நமது மேனிக்கு நல்ல பொன்வண்ண நிறத்தை தரும்

அமுக்கிரா கிழங்கு  கசகசா பாதாம் பருப்பு சாரப்பருப்பு இவை அனைத்தையும் பொடி செய்து இதில் மூன்று கிராம் எடுத்து தினம் இரு வேளை பாலுடன் கலந்து பருகி வர விந்து உற்பத்தி அதிகரிக்கும் நரம்புகளுக்கு பலம் உண்டாகும் இழந்த இளமை மீண்டும் கிடைக்கும் இளமையை நீட்டித்துக் கொள்ள இதுவே நல் மருந்து எனலாம்

வில்வ மரத்தின் வேர் பட்டையை பொடி செய்து இதில் மூன்று கிராம் எடுத்து பாலுடன் கலந்து தினம் இரு வேளை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் நீண்டநாள் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வைக்கும்

அம்மன் பச்சரிசி இலை தூதுவளை இலை இரண்டையும் சமமாகப் பொடி செய்து இதில் மூன்று கிராம் எடுத்து தேங்காய் பாலில் கலந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர தேகத்திற்கு பலம் உண்டாகும் விந்து உற்பத்தியை அதிகரிக்கும் உடல் சோர்வு மற்றும் சத்துப் பற்றாக்குறை நீங்கும்

ஆலம் பழம் மற்றும் ஆல மரத்தின் இளம் தளிர் இலைகளை சம அளவாக எடுத்து இதை மைபோல அரைத்து இதில் ஒரு நெல்லிக்காய் அளவு  காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வர நீர்த்த விந்து கெட்டிப்படும் இதன்மூலம் உடலுக்கு அதிக வலிமையும் ஆரோக்கியமும் உண்டாகும்

மிளகரணை செடியின் வேர் பட்டையை கொண்டுவந்து இடித்து இதில் மூன்று கிராம் எடுத்து 200 மில்லி தண்ணீரில் கலந்து 100 மில்லியாக சுண்டக்காய்ச்சி இதை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர தேகத்திற்கு பலம் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வெகு எளிதாக கிடைக்கும்

அமுக்கிரா கிழங்கு பொடி 3 கிராம் வறுத்து பொடி செய்த கசகசா பொடி ஐந்து கிராம் பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு சாரப்பருப்பு இவை மூன்றும் வகைக்கு 3 கிராம் அளவு எடுத்துக்கொண்டு இதை பசும்பால் விட்டு மை போல அரைத்து மீண்டும் இதைப் பசும்பாலில் கலந்து காலை வேளையில் குடித்து வர நீர்த்த விந்து கெட்டிப்படும் உடலுக்கு இளமையும் முகத்திற்கு அழகும் உண்டாகும்,.

.
மேலும்