உடனடி வெல்ல குழிப்பணியாரம் செய்யலாம் வாங்க?

By Senthil

தேவையான பொருட்கள்

இட்லி மாவு -1 கப் நாட்டுவெல்லம் (பாகு வெல்லம்)- அரை கப் (இனிப்பு அதிகம் வேண்டாம்) தேங்காய்த்துருவல்- 5 டீஸ்பூன் முந்திரி, பாதாம் பருப்பு- தலா 5 (தேவையெனில் இன்னும் உலர் பருப்புகளை சேர்த்து கொள்ளலாம்) ஏலத்தூள்- கால் டீஸ்பூன் நெய்- தேவைக்கு நெய் விரும்பாதவர்கள் ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தலாம்.

செய்முறை இட்லி மாவு அதிகம் புளிக்காமல் இருக்க வேண்டும். நாட்டுவெல்லத்தைப் பொடித்து இலேசாக தண்ணிர் விட்டு அடுப்பில் மிதமான தீ வைத்து ஐந்து நிமிடம் வைக்கவும். வெல்லம் பாகாக தேவையில்லை. கட்டியில்லாமல் கரைந்தால் போதுமானது. என்பதால் கவனமாக கரைந்ததும் கலக்கி இறக்குங்கள்.

அதன்பிறகு இட்லி மாவில் கரைத்த வெல்லப்பாகை ஊற்றி நன்றாக கலந்து தேங்காய்த் துருவல் சேர்த்து வைக்கவும். வாணலியில் நெய் விட்டு உலர் பருப்புகளை சிறிதாக பொடியாக நறுக்கி பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.பிறகு வறுத்த பருப்புகள், ஏலத்தூள் சேர்த்து கலக்கவும்.

 

.
மேலும்