பல வருடங்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் உணவுகள்?

By News Room

எந்த உணவாக இருந்தாலும் அதற்கொரு காலாவதி தேதி உண்டு. உணவு என்பதே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கெட்டுப் போகும் தன்மை கொண்டது. உணவுப்பொருட்கள் கெட்டுப் போவதற்கு காரணம் அதில் பூஞ்சைகளும் பாக்டீரியாக்களும் வளர்வதே ஆகும். எத்தனை நாட்களானாலும் கெட்டே போகாத சில உணவு வகைகளும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? அது எப்படி என்று ஆச்சரியமாக இருக்கிறதா?

ஆமாம் ஆண்டுகணக்கில் வைத்திருந்தாலும் கெட்டுப்போகாத உணவுகள் உண்டு. அதற்கு காரணம் அத்தகைய உணவுப் பொருட்களில் இருக்கும் இயற்கையான பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்புத்தன்மையே ஆகும். அப்படிப்பட்ட 7 உணவுப் பொருட்களைப் பற்றி இங்கே தொடர்ந்து பார்ப்போம்.

முறையாக சேமித்து வைத்தால் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பல வருடங்கள் வைத்து சாப்பிடக்கூடிய சில உணவு வகைகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக நாம் உணவுப் பொருட்களை நீண்ட காலத்திற்கு கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைக்க, நம்முடைய அம்மா மற்றும் பாட்டியம்மா சொன்ன வழிமுறைகளையே பின்பற்றுகிறோம்.

ஆனால் சில உணவுகள் இயற்கையாகவே எந்தவித பாதுகாப்பும் தேவைப்படாமல் நீண்ட வருடங்கள் அதில் அடங்கியிருக்கும் சில பண்புகளால் எப்படி கெட்டுப் போகாமல் இருக்கிறது என்பதைப் பற்றி ஆச்சரியம் அடைந்ததுண்டா? இவை எல்லாமே இயற்கை மற்றும் அறிவியலின் விளையாட்டாகும். சரியான முறையில் பராமரித்தால் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் ஏழு உணவுப் பொருட்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

சோயா சாஸ்:

சுவையூட்டும் பொருட்களில் ஒன்றான சோயா சாஸ் நாட்படும் போது அதன் அசல் காரத்தன்மையை இழக்கக்கூடும். ஆனால் கெட்டுப் போகாது. சோயா சாஸில் அடங்கியுள்ள உப்புத்தன்மை உணவுகளைக் கெட்டுப் போகச் செய்யும் பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கிறது. அதை குளிர்ந்த இடத்தில் வைப்பது நல்லதென்று பரிந்துரைக்கப்படுகிறது.

உப்பு மற்றும் சர்க்கரை:

உப்பு என்பது சோடியம் பைகார்பனேட் என்கிற வேதிப் பொருள் தானே ஒழிய வேறொன்றுமில்லை. இது பூமியின் மேல்பகுதியிலிருந்து வெட்டியெடுக்கப்படும் ஒருவித கனிமம் ஆகும். இது பெரும்பாலும் ஊறுகாய் போன்ற இதர உணவுப் பொருட்களை கெட்டுப் போகாமல் பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகிறது. நல்ல தரமான உப்பு 5 வருடங்கள் வரை கெட்டுப் போகாது என்று நம்பப்படுகிறது. சர்க்கரையின் விஷயத்திற்கு வரும்போது, ஈரப்பதமில்லாமல் காற்று புகாத டப்பாக்களில் பாதுகாத்து சேமித்து வைக்கும் போது அதன் அலமாரி வாழ்நாள் அதிகரிக்கிறது.

டிஸ்டில்ட் ஒயிட் வினிகர்:

வெள்ளை வினிகரில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மை அதற்கு நீண்ட அலமாரி வாழ்நாளை அளிக்கிறது. உண்மையில் இதிலுள்ள அமில பண்புகளால் பிற உணவுகளை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்க பெரும்பாலும் வெள்ளை வினிகர் பயன்படுத்தப்படுகிறது.

தேன்:

என்றென்றைக்குமான வாழ்நாளை கொண்ட ஒருபோதும் கெட்டுப் போகாத ஒரே உணவு தேனாகும். தேனை சேகரித்து தயாரிக்கும் ஒட்டுமொத்த அற்புதமான செயல்முறைக்காக நாம் இயற்கைக்கு நன்றி சொல்ல வேண்டும். தேன் மலர்களின் மகரந்தத் தேனுடன் தேனீக்களின் நொதிகள் கலந்து உருவாகிறது. இப்படி உருவாக்கப்படும் இந்த திரவத்தில் குறைந்த ஈரப்பதமும் அதிக அமிலத்தன்மையும் இருப்பதால் இது இயற்கையாகவே பாக்டீரியாக்களை விலக்கி வைக்கிறது.

வெள்ளை அரிசி:

பழுப்பு அரிசி அதில் நிறைந்திருக்கும் அதிக அளவு எண்ணெய் தன்மையால் காலப்போக்கில் கெட்டுப் போகும். ஆனால் இது வெள்ளை அரிசி, வைல்ட் அர்போரியோ. பாஸ்மதி போன்ற அரிசி வகைகளுக்குப் பொருந்தாது. வெள்ளை அரிசி பல வருடங்களுக்கு கெட்டுப் போகாமல் நீடித்து இருக்கும்.

உலர்ந்த பீன்ஸ்:

உலர்ந்த பீன்ஸை அதன் ஊட்டச்சத்துக்களை இழக்காமல் ஆண்டுக்கணக்கில் சேமித்து வைக்கலாம். இருந்தாலும், ஒரு வருடத்திற்கு பிறகு அது தன் ஈரத்தன்மையை இழந்து விடுவதால், சமைப்பதற்கு முன் தண்ணீரில் நீண்ட நேரம் ஊறவைக்க வேண்டும்.

நெய்

வீட்டில் தயாரிக்கும் பசு நெய் நீண்ட காலத்திற்கு கெடாமல் நிலைத்திருக்கும். அதை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. அடிப்படையில் நெய் என்பது சுத்திகரிக்கப்பட்ட உருக்கிய வெண்ணையே ஆகும்.

வெண்ணைய் பாலாடை அல்லது தயிரின் க்ரீமிலிருந்து தயாரிக்கப்பட்டு புகழ்பெற்ற சமையல் பொருளாகவும் சுவையூட்டியாகவும் பண்டைய காலம் முதலே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த 7 உணவுகளின் மதிப்பு மிக மிக அதிகம். இவற்றை பாதுகாப்பாக வைத்திருந்து பயன்படுத்தி அதன் பயன்களை அனுபவித்து மகிழுங்கள்.

.
மேலும்