டீ கடைகளில் போடப்படும் போண்டாவை, நாம் எப்படி வீடுகளில் செய்யலாம் வாங்க பார்க்கலாம்.
பொருட்கள்: பெரிய வெங்காயம் – 4 பச்சை மிளகாய் – 2 க றிவேப்பிலை – 1 கொத்து நறுக்கிய மல்லித்தழை – 1 ஸ்பூன் கடலை மாவு – 1/2 கப் அரிசி மாவு – 1/4 கப் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை உப்பு
செய்முறை விளக்கம்:
4 பெரிய வெங்காயத்தை முதலில் எடுத்து தோலுரித்து நீள நீளமாக அரிந்து கொள்ள வேண்டும். நறுக்கிய வெங்காயத்துடன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் பொடிப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும்.
இவற்றுடன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு தண்ணீர் விடாமல் பிசைந்து கொள்ளுங்கள். வெங்காயம் தண்ணீர் விடும் எனவே தண்ணீர் சேர்க்காமல் கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் மேற்கூறிய அளவின் படி கடலை மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
லேசாக தண்ணீர் தெளித்து எல்லாவற்றையும் ஒன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒவ்வொன்றாக போடவேண்டும்.
பின் மொறுமொறுவென டீக்கடையில் கொடுக்கும் வெங்காய போண்டாவை போலவே சுட சுட சூப்பராக வெந்து வரும். எடுத்து ஓர் இலையில் வைத்து டீயுடன் சேர்த்து சாப்பிட்டா சூப்பராக இருக்கும். இதனை நீங்களும் உங்கள் வீடுகளில் செய்து பார்க்கலாம்....