தேவையானவை:
பூண்டு - 15 பல் (அல்லது) நாட்டு பூண்டு - 2 வெங்காயம் - 1/2 (அல்லது) சின்ன வெங்காயம் - 10 தக்காளி - 1 புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு மஞ்சள் தூள் - சிறிது சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி (விரும்பினால்) உப்பு - தேவையான அளவு வறுத்து அரைக்க: மிளகாய் வற்றல் - 5 தனியா - 1/2 மேசைக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 கொத்து பூண்டு - 3 அல்லது 4 பல் தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி தாளிக்க: எண்ணெய் - 2 மேசைக்கரண்டி கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை - சிறிது
செய்முறை: ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுத்து அரைக்க கொடுத்தவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுக்கவும். கடைசியாக தேங்காய துருவல் சேர்த்து பிரட்டி எடுத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் பூண்டு சேர்த்து வதக்கவும். பெரிய பூண்டாக இருந்தால் நறுக்கிச் சேர்க்கவும். நாட்டு பூண்டு சிறிதாக இருந்தால் அப்படியே போடலாம்.
பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இதில் அரைத்த விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின் உப்பு, புளிக் கரைசல் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.