திருமணத்துக்கு முன்பு உறவு வைத்தால்?

By News Room

திருமணத்திற்க்கு முன் உடலுறவு வைத்து கொள்வதா இல்லையா என்பதை அவரவர் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் தப்பு/சரி என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. ஒருவர் உடலுறவு வைத்து கொள்வது அவரின் விருப்பம், இதில் மற்றவர் கருத்து சொல்வதிற்கு என்ன இருக்கிறது?

ஆனால் நான் சொல்வது என்னவென்றால், உடலுறவு வைத்து கொள்வதற்கு முன், நன்றாக யோசித்து கொள்ள வேண்டும். உடலுறவு வைத்து கொண்ட பின் சில உணர்ச்சி ரீதியான பிரச்சினைகளை சந்திக்க நேரலாம்.  

உடலுறவு உடலுக்கு மட்டும் சம்மந்தமானது இல்லை. உணர்ச்சி ரீதியாகவும் சம்மந்த பட்டது. அதையெல்லாம் சமாளிக்கும் திறன் உங்களுக்கு உண்டா என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக ஆண்களை விட பெண்கள் இதை நன்றாக யோசிக்க வேண்டும்.

என்னை பொறுத்த வரை, நான் நவீனமானவன்/நவீனமானவள் அப்படினு காட்டிக்குறதுக்கு, ஆழம் தெரியாம கால விட கூடாது. அவ்வாறு தப்பு கணக்கு போட்டால், அதன் விளைவை நீங்கள் வாழ் நாள் முழுவதும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். குறிப்பாக உடலுறவு வைத்து கொள்வதற்கு முன் அதை எவ்வாறு பாதுகாப்பான முறையில் செய்ய வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் நான் ஒரு கிருத்துவன் (Christian). என் மதத்தில் திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்து கொள்வதை ஆதரிக்கவில்லை. அனால் அவ்வாறு வைத்து கொள்பவர்களை நான் தப்பாக எண்ண மாட்டேன். அது தனிப்பட்ட மனிதனின் விருப்பம்.

.
மேலும்