திருமணம் முடிப்பது
உடல் தேவைகளை தீர்த்துக் கொள்ள மட்டுமே என்பதைப் போல் தான் இன்று பல வாலிபர்கள் திருமண வாழ்க்கையில் இனைகின்றனர்.
அவர்களைப் பொறுத்தவரை
மனைவி என்பவள் திருமணம் முடிக்கும் வரை அத்தியாவசியத் தேவை, அதன் பின் அவள் ஒரு வாழ்நாள் தொல்லை என்பதைப் போல் தான் நடந்து கொள்வார்கள்.
அதற்கு ஏற்றால் போல்
நகைச்சுவைகளும், வீடியோ க்லிப்களும் மனைவியை கலாய்ப்பது, திருமணத்தின் பின் மனைவி ஒரு தொல்லை போன்று சித்தரித்து வெளிவர, அதனை இவர்கள் நிஜ வாழ்விற்கு உருக்கொடுத்து வாழ முயற்சி செய்கின்றனர்.
இவர்களுக்கு மனைவி தொல்லையாகிப் போவது எங்கென்றால், திருமணம் முடித்து விட்டோம், எமக்கு என்று ஒரு மரியாதை வேண்டும், எமது மனைவிக்கு என்று மரியாதை இருக்க வேண்டும். என் பிள்ளைகளுக்கு மரியாதையான தகப்பனாக நான் இருக்க வேண்டும், எனக்கு என்று ஒரு குடும்பம் உள்ளது அதன் மானத்தை காக்க வேண்டும் என்ற எந்த சொரனையும் இல்லாமல்,
24-25 வயதாகும்போதே
17-18 வயதில் ஒருத்தியை தேடி திருமணம் முடித்துக் கொள்கின்றனர். சில நாட்களின் பின் "இவ்வளவு தானா பொம்புள" என்பது போல் அனைத்தும் தீர்ந்த பின்,
கிரிக்கட் மட்டையை,
பூட் போலை (FootBall) தூக்கிக் கொண்டு மைதானம், புட் சால் என்று சென்று விடுகின்றனர். விளையாடுவது தவறே கிடையாது. ஆனால் அங்கு விளையாடி முடிந்து,
அப்படியே ஒரு ஆட்டோவிலோ, சந்தியிலோ குந்தி சிகரட், பீடி, கஞ்சா, சாராயம் என்று எதையாவது ஏத்திக் கொள்கின்றனர்.
அப்படியே ஒரு ஹோட்டலில் புகுந்து
அங்கும் பிலேண்டி, சிகரட் என்று ஊதி விட்டு இரவு 11,12 மணியளவில் வீட்டிற்கு வந்து,
பொண்டாட்டியிடம் தீர்க்க வேண்டியதை தீர்த்து விட்டு
குப்புரப்படுத்துக் கொள்கின்றனர்.அல்லது கைத் தொலைபேசியில் மூழ்கி விடுகின்றனர்.
இதில் எத்தனையோ பேருக்கு
பிள்ளைகள் இருந்தும் சமூக வலையத்தளத்தில் கள்ளப் பொண்டாட்டிகள் வேறு....
விடுமுறை நாள் என்றால்
நண்பர்களுடன் காடு மேடு என்றும், பிரியானி, பாபிக்யூ என்றும் ஊர் மேயச் சென்று விடுகின்றனர்.
மனைவியின் வீட்டை, அங்கு செல்வதை கேவலமாக பார்ப்பது, அவளுடன் வெளியில் செல்வதில்லை என்று வீட்டோடு அவளை வைத்து விடுகின்றனர்.
இப்படி வாழ்ந்தால் தான் கெத்தாம்
இல்லாவிட்டால் அவர் பொண்டாட்டி தாசனாம், இதைப் பற்றி எல்லாம் அந்த மனைவி கதைத்தால், இரவு தாமதமாகாமல் வீடு வாங்க என அவள் சண்டைபிடித்தால், தெருத் தெருவாக அலைந்து திரிய வேண்டாம் என அவள் கோபித்தால்,......, அது அடக்கு முறையாம் , வாய் காட்டுவதாம், அறப்படிக்கிறதாம் என்று சண்டை சச்சரவு, அடிதடி என்று வம்பிழுத்து,
கடைசியில்
கள்ளத் தொடர்பு, அதுஇது என எத்தனையோ குடும்ப சீரழிவுகள், பல இடங்களில் விவாகரத்து வரை வாழ்க்கை சென்று முடிந்தது என்று சீரழிவுகள் மட்டுமே மிஞ்சிய வாழ்க்கை பலருக்கு அமைந்து விடுகிறது.
பொண்டாட்டி என்றால்
சமைத்துப் போடவும், கட்டிலை பகிர்ந்து கொள்ளவும் மட்டும் தானோ?
இதையே உமது அப்பா செய்து வந்தால்,
உம்மைப் போலவே நேரம் கெட்ட நேரத்தில் வீடு வந்தும், சந்து பொந்துகளில் சிகரட்டை, சாரயத்தை ஊத்தியும், ஊதியும் திரிந்தால்,
அவரை எல்லாம்
ஒரு மனுஷனா, கெத்தான ஆம்புளயாக அந்த ஊர் மதிக்குமா, குடும்பம் மதிக்குமா இல்லை நீங்க தான் மதித்து இருப்பீங்களா?
உமது வீடு வீடாக இருந்திருக்குமா?
உமது குடும்பம் குடும்பமாக இருந்திருக்குமா? உம்மால் படித்திருக்க முடியுமா? தெருவில் தலை நிமிர்ந்து நடந்திருக்கத் தான் முடியுமா?
யோசனை செய்யுங்கள்.
நீங்களும் திருமணம் முடித்து விட்டீர்கள்,
உமக்கும் குடும்பம் என்ற ஒன்று வந்தாகிவிட்டது இப்படியே போவதா அல்லது,
சரி இத்தனை நாள் இப்படி இருந்து விட்டேன்.
இனிமேல் சரி திருந்தி மரியாதையாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்றேனும் கொஞ்சம் மனதில் எடுத்து,
ஒருத்தியின் கணவன் என்றால்
நான் ஒரு குடும்பத் தலைவன், எனக்கு 25 வயது தான் என்றாலும் என்னை நம்பி வந்தவளின் மரியாதை கூட என் கையில் என்பதை நினைத்து திருந்தி வாழ முயற்சி செய்வோம்.
கணவன் என்றால், தகப்பன் என்றால்
அந்த வீட்டில் எமக்குக் கீழ் இருப்பவர்கள் எம்மை ஆசையாக வேலை விட்டு வரும் வரை வரவேற்கக் காத்திருக்க வேண்டும்.
ஒன்றாக கதைத்து, சாப்பிட்டு சந்தோஷமாக
அந்த வீட்டின் நிம்மதியாக, அத்திவாரமாக இருந்திட வேண்டும்.
பிள்ளைகுட்டியாக ஒன்றாக மகிழ்ச்சியாக, அவர்களின் பாதுகவலனாக இருந்திட வேண்டும். இனியாவது திருந்தி வாழ பழகிக்கொள்ளுங்கள். தொழுகையையும் விட்டுவிடாமல் பேணுதலாக தொழுதும், மனைவி மக்களை தொழக் கூடியவர்களாகவும் மாற்றி இறைவனது பொருத்தத்துடன் வாழப் பழகுங்கள்!