கலங்கமற்ற உண்மையான அன்பிலும், காதலிலும் கலந்த கலவியில் உருவாகும் குழந்தைதான் இன்றைய உலகை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்கிறார் ஓஷோ.
John Brosnan என்ற அறிவியல் அறிஞர் ஒரு முழுமையான பாலுறவு என்பதற்கு வரையறை கொடுக்கிறார்.
ஒரு ஆண் தன் உள்ளதாலும், உடலாலும் பெண்ணை மகிழ்வித்து, தானும் இன்பம் அடைந்து சராசரியாக உச்ச இன்பம் மட்டும் 5 முதல் 10 நிமிடங்கள் வரை பெண்ணிற்கு இன்பத்தை கொடுத்து பின்பு ஆணும் இன்பம் அடைந்து, இருவரும் உச்சகட்ட இன்பத்தை அனுபவிக்க குறைந்தது 30 நிமிடங்கள் பாலுறவு நடை பெறவேண்டும் என்கிறார்.
பாலுறவின் நேரத்தை அதிகரிக்க ஆண் பெண் திறமை ஆசைகளை பொறுத்தது.
ஆனால் இன்றைய காலத்திலும் எது சரியான பாலுறவு என்பது நன்கு படித்தவர்களுக்கும், உயர் அதிகாரிகள், அறிவாளிகள் அவர்களுக்கும் தெரிவது இல்லை என்று டாக்டர் காமராஜ் அவரின் புத்தகத்தில் கூறுகிறார்.
ஆண்-பெண் சேர்ந்து அனுபவிப்பதே முறையான பாலுறவாகும். பெண்ணிற்கு ஆசை இல்லாமல் ஒரு ஆண் எவ்வளவு முயன்றாலும் அந்த பெண்ணிற்கு உச்ச இன்பத்தை கொடுக்க முடியாது.
அதே போல் பாலுறவு என்பது கணவன் மட்டும் செய்யக்கூடிய செயல் என்று பெண் மரக்கட்டை போல் படுத்து இருக்கும் பெண்ணிடம் எந்த ஆணும், ரதி போல் அழகான பெண்ணாக இருந்தாலும் அவளுடன் பாலுறவு கொள்ள விரக்தி அடையவே செய்வான், பின்பு வேறொரு பெண்ணையும் நாடவே செய்வான்.
ஆகையால் பெண்ணும் பாலுறவை பொறுத்த வரை மனம் ஒத்து இயங்கும் போதுதான் அந்த பெண்ணிற்கு முழுமையான இன்பம் கிடைக்கும். பெண்ணும் இயங்காமல் ஒரு ஆண் மட்டும் இன்பத்தை கொடுக்க வேண்டும் என்று நினைப்பது ஒரு கையால் தட்டி ஓசை எழுப்புவதற்கு சமம்.
ஒரு பேருந்தை இயக்கும் போது ஓட்டுநர் சாலையில் மேடு பள்ளங்கள், வேகத்தடை, sudden break, சாலையில் எதிர்பாராத விபத்துக்கள் என்று பல இன்னல்களை கடந்துதான் ஓட்டுநர் பேருந்தை இயக்க முடியும். அது போல் குடும்பத்திலும் ஆண்/பெண் இருவருக்கும் பண பிரச்சனை, உறவுகள் பிரச்சனை, அலுவலக பிரச்சனைகள் என்று பல இருந்தாலும். பாலுறவு என்று வரும் போது இருவரும் பிரச்சனைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, இரண்டு உடல்களின் சங்கமம் , இரண்டு மனங்களின் ஆசைகள், இரண்டு ஆன்மாக்களின் சேர்க்கை என்று ஒரு புதிய உலகத்தில் நுழைய வேண்டும். அந்த உலகத்தில் உங்களுக்கு பிடித்த ஆண் - பெண் மட்டுமே இருக்க வேண்டும்.
இந்த உலகத்தில் உயிர் உள்ள அணைத்துமே காமத்தால் உருவானவைதான். அதை பெண் இனம் தான் உருவாக்கும் சக்தி படைத்தவள். அதற்கு உரிய மரியாதையை ஆண் இனம் கொடுப்பது உலகத்தில் மிக சிறந்த ஒழுக்கம்.
ஒரு ஆண் ஒரு பெண்ணை அனுபவிக்க ஆசை இருந்தால் அவளின் மரணம் வரை அவளின் பாதுகாப்பு, அவளின் தேவையை பூர்த்தி செய்வேன் என்ற உத்தரவாதத்தோடு அந்த பெண்ணை தொட வேண்டும் ஆனால் இதில் பல ஆண்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அவள் தான் என்னை தேடி வந்தாள் என்பார்கள். இன்பத்திற்காக மட்டும் ஒருவள் உன்னை தேடி வந்தாள் அவள் வேறு ஒருவனிடமும் இன்பத்திற்க்கு செல்வாள். இதே போல்தான் ஆண்களுக்கும். ஒரு பெண்ணை காமத்திற்காக மட்டும் ஒரு ஆண் பெண்ணை அணுகினால் அவன் வேறொரு பெண்ணிடமும் காமம் கொள்ளவே செய்வான்.
ஆசைகள் பலவாகத்தான் இருக்கும் ஆனால் கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருப்பது மிகவும் முக்கியம்.
ஆண்-பெண் 14 வயதிலிருந்து 25 வரை காதல் காமம் என்று சிக்கிக்கொள்பவர்கள் வாலிப வயதில் மற்ற பல விசயங்களை தவற விடுபவர்கள் ஏராளம் ஏனென்றால் இளமை வயது காதல், காதலின் மோகம் அவர்களை வாட்டி எடுக்கும் மற்ற திறமைகள், சந்தோசங்களை அந்த காதல் பறித்து விடும்.
அதே போல் 25 க்கு மேல் ஒரு காதல் ஒரு காமம் என்று கட்டுப்பாட்டிற்குள் இருப்பது அவசியம்.
இதில் வெவேறு நிலைகளில் இருப்பார்கள் மனதிற்கு புடிக்காமல் வாழும் குடும்பம், கணவன் புகை-குடிகாரன், மனைவியை கொடுமை படுத்துபவன், மனைவியின் டார்ச்சர், விவாகரத்து என்று பல இன்னல்கள் இருக்கும் அவர்களின் தகுதிக்கு ஏற்ப சட்டமூர்வமாக அமைத்து கொள்வது உத்தமம்.