ஆபாச வீடியோக்களை தவிர்ப்பது எப்படி?

By News Room

கையில் மொபைல் வைத்திருந்தால் இரவின் இது போன்ற உணர்வுகள் ஏற்படும் நிலைதான் இன்று. குறிப்பாக ஆண்களின் வாழ்க்கை கடினம் தான்.

வீட்டில் இருக்கும் அனைவரும் உறங்கும் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதனால் உடல்நலம் கெட்டது. வேலையில் ஆர்வமில்லாமல் போனது.

நண்பரிடம் புலம்பியதில், அவர் என்னை ஜிம்மில் சேர சொன்னார். மாலை 7 மணிக்கு பணி முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு, அருகிலிருக்கும் ஜிம்மிற்கு சென்று வந்தேன். அதன் பிறகு இரவு சாப்பிட்டு முடித்த அரை மணி நேரத்தில், அடித்து போட்டதை போல உறக்கம் வரும். அதனால் இந்த  பழக்கம் குறைந்தது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால். பிறகு திருமணம் ஆனது. அப்போதும் இந்த பழக்கம் தொடர்ந்தது. என் குழந்தை வளர ஆரம்பித்த பிறகு என் மூலமாக அவன் எந்த தீய பழக்கங்களையும் கற்றுக்கொள்ள கூடாது என்ற எண்ணம் என்னை மாற்றியது.

குழந்தையை பள்ளியில் சேர்க்கும் போது அங்குள்ள  பெண் குழந்தைகளின் கள்ளமில்லா சிரிப்பை பார்க்கும் போதும், அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் ஒருவித தவிப்புடன் அந்த பெண் குழந்தைகளை பள்ளியில் விட்டு செல்வதைப் பார்க்கும் போது மனதில் ஒரு சங்கடம் ஏற்பட்டது.

அந்த ஆபாச படங்களில் விருப்பத்துடனோ (அ) விருப்பமின்றியோ நடிக்கும் பெண்களும் இப்படித் தானே குழந்தைகளாக இருந்து இருப்பார்கள். இப்படித் தானே அவர்களுடைய பெற்றோர்களும் அவர்களை அக்கறையுடன் வளர்த்திருப்பார்கள் என்று யோசித்தேன்.

அதன் பிறகு அந்தப் பக்கம் போவதில்லை. நல்லவனாகி விட்டேன் என்று சொல்ல விரும்பவில்லை. அது தவறு என்று எனக்கு நன்றாக புரிந்துவிட்டது. மனம் எனும் குதிரை யாருக்கும் அடங்குவதில்லை. அதுவாக நல்லது கெட்டதை உணர்ந்து தெரிந்துகொண்டால் தான் உண்டு.

இன்று என் செல்போனை எப்போது வேண்டுமானாலும் என் மகனோ மனைவியோ தாயோ எடுத்து பார்க்கலாம். அதனால் நான் பதறுவதே இல்லை.

எனக்கு தெரிந்து ஆபாச மீம்ஸ் மற்றும் காணொளிகளுக்காகவே இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் நிறைய பேர் உண்டு. சிலர் லுங்கிக்குள்ளோ அல்லது பனியனுக்குள்ளோ செல்போனை மறைத்து பாத்ரூமிற்கு எடுத்து செல்கிறார்கள் என்று கூட கேள்விப்பட்டுள்ளேன்.

ஆம்ஸ்டெர்டாமில் ஒரு விபச்சார விடுதியின் எதிரில் பணி நிமித்தமாக குடியிருந்த என் நண்பன், அவன் கண்ட காட்சிகளை சொல்லி இருக்கிறான்.

நள்ளிரவில் அந்த விடுதியின் முன்பு அடிக்கடி ஆம்புலன்ஸ் நிற்குமாம், இரண்டு தொடைகளில் இரத்தம் வழிய பெண்களை சிகிச்சைக்கு அழைத்துக் கொண்டு செல்வார்களாம்.

இந்தத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் அடுத்த நாள் அடிவயிற்றை பிடித்துக் கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டு நடப்பார்களாம். இது போன்ற சம்பவங்கள் அங்கிருக்கும் அனைத்து பாலியல் தொழில் செய்யும் விடுதிகளிலும் நடைபெறும் என்று சொல்வார்களாம். அந்த ஊரில் விபச்சாரம் சட்டபூர்வமான அங்கீகரிக்கப்பட்ட தொழில். அவர்களுக்கு மருத்துவ காப்பீடு முறையான சிகிச்சை வசதியும் உண்டு.

தனி அறையில் இருந்தால் இதன்பிறகு தாய் தந்தை இருக்கும் அறையில் தரையில் படுத்து தூங்குங்கள். உடல் களைப்பு தரும் உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.

அறிவை வளர்க்கும் புத்தகங்களை தேடித்தேடி படியுங்கள். இரவில் குறைவில்லா உறக்கம் தானாக வரும்.

.
மேலும்