பட்டாணி மசாலா சுண்டல்

By Senthil

தேவையான பொருட்கள்: 

பட்டாணி - 200 கிராம்  மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்  சீரகம் - 1 டீஸ்பூன்  வெங்காயம் - 1  தக்காளி - 2  இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்  பச்சை மிளகாய் - 2  கரம் மசாலா - 1 டீஸ்பூன்  மல்லித் தூள் - 1 டீஸ்பூன்  மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்  எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்  கொத்தமல்லி - சிறிதளவு  உப்பு -  தேவைக்கு ஏற்ப

செய்முறை: 

வாணலியில், எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் போட்டு பொரிக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். அத்துடன், மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். பின்னர், தக்காளி சேர்த்து நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும். மசாலா கிரேவி பதத்திற்கு வந்ததும், பட்டாணி, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பட்டாணி வேகும்வரை கொதிக்க வைக்கவும். இறுதியாக, கொத்தமல்லித் தூவி இறக்கவும். இப்போது, சுவையான பட்டாணி சுண்டல்  ரெடி

.
மேலும்