அல்சர் குணமாக என்ன செய்யலாம்?

By saravanan

அல்சர் எனப்படுவதே ஆறாத புண் என்பது தான்.. உணவுப் பாதையில் உள்ள ஆறாத புண்கள் தான்.. உங்களுக்கு தொந்தரவு தருகிறது. அவற்றை பெப்டிக் அல்சர் என சொல்வார்கள் மருத்துவர்கள்.

கேஸ்ட்ரிக் அல்லது இரைப்பை அல்சர்:  இரைப்பையில் அதிக அளவில் அமிலத்தன்மை தேங்கி நிற்கும். எந்த உணவு சாப்பிட்டாலும்.. அது உடனே எதுக்களித்துக் கொண்டு மேலே உணவுக்குழாய் வழியே தொண்டைக்கு வரும்.. உணவு உண்ட பின்.. வயிற்றில் வலி அதிகமாக இருக்கும்.. உடல் மெலிவு ஏற்படும்.. வயிற்று போக்கு உண்டாகும்.. வாந்தி அதிகமாக காணப்படும்.. இரத்தம் கலந்த வாந்தி.. அதீத வயிற்று வலியுடன் இவ்வகை அல்சர் ஏற்படுத்தும்.. பசியின்மை இருக்கும்..

இந்த இரண்டு..வகையான அல்சர்களில்.. முதன்மை வகையான உணவு உண்ட பின்.. வயிற்றில் வலி அதிகரிக்கும்.. வகை.. கண்டிப்பாக.. குடல் அறுவை சிகிச்சை மருத்துவரிடம்… ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்.. ஏனெனில் இந்த வகை.. அதிகமாக ஹெலிக்கோபேக்டர் பைலோரி என்ற பாக்டீரியா காரணமாக உண்டாகும் ஆறாத வயிற்றுப்புண் ஆகும்.. புற்றுநோயாக மாறும் தன்மை கொண்டது.  அறுவை சிகிச்சை மருத்துவர்.. வாய் வழியே எண்டோஸ்கோபி பரிசோதனை செய்து.. உள்ளே இருக்கும் வயிற்று புண் எந்த நிலையில் உள்ளது என்று ஆராய்ந்து தேவை எனில்.. அதை பயாப்ஸி என்ற திசு பரிசோதனை செய்து பார்ப்பார்கள். ஆரம்ப காலத்தில் செய்து கொள்ளும் சிகிச்சை பல ஆபத்துகளை தவிர்க்கும்..

குடற்முதற் பகுதி அல்லது டுயோடினல் அல்சர் வகை:  இரண்டாவது வகை இரைப்பையில் இருந்து குடற்பகுதி ஆரம்பித்து.. முதல் பகுதியில்.. டுயோடினம்.. என்பார்கள்.. அவற்றில்… ஏற்படும் புண்.. டுயோடினல் அல்சர் எனப்படும்..வயிற்று வலி.. உணவு உண்ட பின்… சரியாகும்.. அதனால். அதிக அளவில் உணவுகளை உட்கொள்வார்கள்… உடை எடை அதிகரிக்கும்..

இவர்களுக்கு.. மலச்சிக்கல் அதிகமாக காணப்படும்.. அதிக ஆபத்து இல்லாத வகை இது. சரியான உணவுப்பழக்கம்.. நேரத்திற்கு உணவு உண்ணுதல் மற்றும் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் இரண்டையும் அறவே தவிர்க்க வேண்டும்.  அமிலத்தன்மை குறைக்கும் மருந்துகள் மருத்துவர் ஆலோசனை படி எடுத்துக் கொள்ள .. நல்ல முறையில் குணமாகும்.

இவர்களுக்கு.. நிறைய பசி எடுக்கும்.. நிறைய சாப்பிடும் பழக்கம் இருக்கும்.. காரம் புளிப்பு சுவை உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.... வெறும் வயிற்றில் சோடா மற்றும் இளநீர்; தேனீர் காபி தவிர்க்க வேண்டும்.. சரியான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி இந்த தொந்தரவை கட்டுப்படுத்தும்.

இது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்ட பதிவு.. தமிழகத்தை பொறுத்தவரை . எல்லா மாவட்ட தலைநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள அறுவைசிகிச்சை துறையில் மருத்துவரை அணுகி.. தகுந்த எண்டோஸ்கோபி பரிசோதனை மற்றும் மருந்துகளையும் இலவசமாக பெற்று கொள்ளலாம் .விரைவில் குணமாகும்.

.
மேலும்