எளிமையாக அதிக செலவில்லாமல் கிடைக்கும் கீரைகளின் நன்மை என்ன தெரியுமா?

By saravanan

வெந்தயக்கீரை:

உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்றுப் புண்கள், பேதியை குறைக்கும். அதிகமாக இரும்புச்சத்து கொண்டது.

முருங்கை கீரை

உடலுக்கு சக்தியையும், வலிமையையும் அளிக்கும். இரும்புச்சத்து அதிகம் உள்ள முருங்கைக் கீரை  ஆண்மையை அதிகரிக்கவும், உடலுக்கு சக்தியையும் வலிமையும் தரும்.

மலச்சிக்கலை குறைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தவும், மாதவிலக்கின் போது ஏற்படும் வலியையும் ரத்தசோகையை குறைக்கும்.

அரைக்கீரை

நமது உடலில் உள்ள விஷங்களை முறிக்கும் சக்தி கொண்டது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களை போக்குவதுடன் நரம்பு தளர்ச்சியை போக்கும்.

நம் குடலில்  புண்னை ஆற்றவும் உதவும். மேலும் தேமல், சிரங்கு, சொறி, போன்ற நோய்கள் வராமல் இருக்க பயன்படும்.

சிறுகீரை

மலச்சிக்கலையும் உடலில் உள்ள அதிகப்படியான பித்தத்தையும்

அகத்திக்கீரை

உடலில் உள்ள அதிகளவு வெப்பத்தை குறைக்கவும் குடற்புழுக்களை அழிக்கும் உதவும்.

பித்தம், தலைச்சுற்றல், மயக்கம் வராமல் தடுக்கவும்,  ரத்தத்தை சுத்திகரிக்கவும் பயன்படும். இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பேதி ஏற்படும் வாய்ப்பு உண்டு.

மணத்தக்காளி கீரை

வயிற்று புண்களை போக்கவும், குடல் புண்களை குறைக்கவும் நமது வயிற்றில் உள்ள குடலுக்கு பலத்தை அளிக்கும்.

பசலைக்கீரை

உடலுக்கு குளிர்ச்சி தரும். சிறுநீர் கட்டியை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது. தாய்மார்களுக்கு  தாய்பால் சுரக்கவும் உதவும்.

.
மேலும்