வத்தல் குழம்பு வைப்பது எப்படி?

By News Room

தேவையானப் பொருட்கள்: இவை வதக்கத் தேவையானப் பொருட்கள்: வெள்ளைப் பூண்டு - 100 கிராம் சின்ன வெங்காயம் -  200 கிராம் உரித்தது  முழுதாக இருக்கட்டும் சுண்டை வத்தல் - 20 எண்ணம் வறுத்தது மிதுக்கு வத்தல் - 10 வறுத்தது நல்லெண்ணெய் - 150 மில்லி புளி கரைசல் - தேவையான அளவு குழம்புப் பொடி - 1 டேபிள் ஸ்பூன் தேவையான அளவு உப்பு

தேவையானப் பொருட்கள்: தேங்காய் - 1/2 முடி மிளகாய் வற்றல் - 7 சீரகம் - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை: 1. வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் உரித்த வெள்ளைப்பூண்டு இட்டு பொன்னிறமாக வறுக்கவும். 2.பூண்டை வறுத்தவுடன்  உரித்த சின்ன வெங்காயம் முழுதாக போட்டு நன்கு வதக்கவும். 3.வறுத்து வைத்துள்ள சுண்டைக்காய் வத்தல் மற்றும் மிதுக்கு வத்தல் சேர்த்து வதக்கவும். 4. அனைத்தும் வதங்கியதும் புளிக்கரைசல் மற்றும் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு மற்றும்  குழம்புப் பொடிச்  சேர்த்து கலந்து பச்சை வாசம் போகும் வரை லோ ப்ளேமில் கொதிக்க விடவும். 5. குழம்பு கொதிக்கும் நேரத்தில் மேலே சொன்ன அரைக்க வேண்டிய மசாலாப் பொருட்களை அரைத்துக் கொள்ளவும். 6. இப்போது குழம்பு நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா குழம்பில் சேர்த்து இரண்டு முதல் மூன்று கொதி வரும்  வரை கொதிக்க விட்டு இறக்கவும். 7.சுடச்சுட ஹோட்டல் டேஸ்ட் சுவையான சுண்டைக்காய்வத்தல் குழம்பு ரெடி. 8. இந்த ரெசிபி பிடித்து இருந்தால் லைக் சேர் அன்ட் கமன்ட் பண்ணுங்க பிரண்ட்ஸ்.

பி. கு: குழம்பு நிறம் வேண்டும் என்றால் மிளகாய் வற்றல் குறைத்துக் கொண்டு காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளலாம். இப்பவே திங்க வாய் ஊருதே

.
மேலும்