1. *கருப்பு கவுணி அரிசி*
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
3. *பூங்கார் அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4. *காட்டுயானம் அரிசி* :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
5. *கருத்தக்கார் அரிசி* :
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
6. *காலாநமக் அரிசி* :
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
7. *மூங்கில் அரிசி*:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
8. *அறுபதாம் குறுவை அரிசி* :
எலும்பு சரியாகும்.
9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி* :
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
10. *தங்கச்சம்பா அரிசி* :
பல், இதயம் வலுவாகும்.
11. *கருங்குறுவை அரிசி* :
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
12. *கருடன் சம்பா அரிசி* :
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
13. *கார் அரிசி* :
தோல் நோய் சரியாகும்.
14. *குடை வாழை அரிசி* :
குடல் சுத்தமாகும்.
15. *கிச்சிலி சம்பா அரிசி* :
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
16. *நீலம் சம்பா அரிசி* :
இரத்த சோகை நீங்கும்.
17. *சீரகச் சம்பா அரிசி* :
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
18. *தூய மல்லி அரிசி* :
உடல் உள் உறுப்புகள் வலுவாகும்.
19. *குழியடிச்சான் அரிசி* :
தாய்ப்பால் ஊறும்.
20. *சேலம் சன்னா அரிசி* :
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
21. *பிசினி அரிசி* :
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
22. *சூரக்குறுவை அரிசி* :
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
23. *வாலான் சம்பா அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
24. *வாடன் சம்பா அரிசி* : அமைதியான தூக்கம் வரும்
25. *திணை*
உடலுக்கு வன்மையை கொடுக்கும்.வலிமையை பெருக்கும்.உடலை வலுவாக்கும்.
26. *வரகு*
உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும்
27. *சாமை*
காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும்.
28. *குதிரைவாலி*
தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும்.
39. *கை குத்தல்*
உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.
30. *சிவப்பு காட்டு அரிசி*
இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
31. *சிவப்பு அரிசி*
கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
32. *குள்ளகார் அரிசி*
இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்.
33.மாப்பிளை சம்பா :
உடலை பலபடுத்தும் மாமருந்து . திருமணதிற்கு தயாராகும் மணமகன்கள் தொடர்ச்சியாக 41 நாட்கள் இதன் நீராகாரத்தை உண்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும்.
34.கவுணி அரிசி :
புது மாப்பிள்ளைகான விருந்துணவு அரிசி. இதன் கஞ்சி குடித்தால் குதிங்கால் வலி நீங்கும் .
35.சிவப்பு கவுணி அரிசி :
புது மண தம்பதியர் உண்ண வேண்டிய அரிசி . இது ஒரு பலகார அரிசி. இட்லி,ஆப்பம், பணியாரம் செய்ய ஏதுவானது . குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி தரும் .கருவில் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகும் .
36.பூங்கார் அரிசி :
மகப்பேறு காலங்களில் உண்ண வேண்டிய அரிசி . தாய்பால் சுரக்கும் .
37.கட்ட சம்பா அரிசி :
நோய் எதிர்ப்பு சக்தி தரும் .
38.சிங்கினி கார் அரிசி :
எல்லா விதமான நோயாளிகளும் உண்ண வேண்டிய அரிசி. உடல் நலம் பெற உதவும் .
39.இலுப்பைபூ சம்பா அரிசி :
சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். மூட்டு வலி,பக்க வாதம் போன்ற நோய்க்கான மருந்து . நரம்பு பிரச்சனையின் மருந்து .
40.காட்டுயானம் அரிசி :
இந்த அரிசியில் கஞ்சி வைத்து கறிவேப்பில்லை போட்டு மூடி வைத்து , மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் . இப்படி தொடர்ச்சியாக செய்தால் புற்றுநோயால் ஏற்படும் புண்கள் ஆறும் . இதுவே புற்று நோய்க்கு மருந்தாக இருக்க வேண்டும் என ஆய்வுகள் நடைபெற்று வருகிறது .
41.சூரகுருவை அரிசி :
நோய் எதிர்ப்பு சக்தி தரும் .
42.பனங்காட்டு குடவாழை அரிசி :
தொழிலாளர்களின் தோழன் இந்த அரிசி . அந்த அளவிற்கு நோய் எதிர்ப்பும், உடல் வலிமையையும் தரும் .
43.கருடன் சம்பா :
நோய் எதிர்ப்பு சக்தி தரும். சாப்பாடு மற்றும் பலகார அரிசி .
44.கருங்குறுவை அரிசி :
இதன் நெல் கரு நிறம். அரிசி செந்நிறம் இது ஒரு மாமருந்து. இந்த அரிசியுடன் மூலிகை மருந்து சேர்த்தால் லேகியம் செய்ய முடியும் . அது யானைக்கால் நோய்க்கான மருந்து . குஷ்டதிற்க்கும் , விஷகடிக்கும் மாமருந்து. உடலை வலுவாக்கும் காயகல்ப சக்தி கொண்டது . இந்த அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஊரவைத்து ஆறுமாதம் கழித்து எடுத்தால் பால் போல் இருக்கும் . இதற்க்கு 'அன்ன காடி 'என்று பெயர் .இது காலராவிர்க்கான மருந்து . இது கிரியா ஊக்கியாக உள்ளது .
45.கார் அரிசி : சர்க்கரை நோய்க்கும், வாதம் சம்பந்தமான நோய்க்கும், கரப்பான் களுக்கும் மருந்தாகும்.
46.தங்க சம்பா :
இந்த அரிசியை தொடர்ந்து உணவிலும் , பலகாரத்திலும் சேர்த்து வந்தால் முகம் பொலிவுடன் ஜொலிக்கும். நோய் எதிர்ப்பு திறனும் கொடுக்கும்.
47.தூயமல்லி அரிசி :
மேல குறிப்பிட்ட எல்லா அரிசிகளும் சிவப்பரிசி . கட்ட சம்பா தவிர்த்து . தூய மல்லி அரிசியானது இன்னும் மல்லிகை போல் பளபள வென இருக்ககூடியது .மக்கள் எதிர்ப்பார்க்கும் எல்லா குணங்களும் கொண்ட ஒரு அரிசி . தெவிட்டாத , நோய் எதிர்ப்பு சக்தி தரும் அரிசி .
48.கல்லுண்டைச்சம்பா -
இதை உண்பவர்களுக்கு மல்யுத்தக்காரரும் எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும். மிகுந்த வார்த்தை வளமும் உண்டாக்கும்.
49.காடைச்சம்பா -
இந்த அரிசி பிரமேக சுரமும், குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும். விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.
50.காளான் சம்பா -
உடலுக்கு மலை போன்ற உறுதியையும், சுகத்தையும் தரும். சில வாத ரோகத்தையும் குறைக்கும்.
51.கிச்சிலிச்சம்பா -
பலம், உற்சாகம், உடல் பளபளப்பு ஆகியவற்றை உண்டாக்கும். தேறாத உடல் தேறும்.
52.குறுஞ்சம்பா -
பித்தம், கரப்பான் நீங்க விந்து விருத்தியை உண்டாக்கும். வாத நோயைநீக்கும்.
53.கைவரை சம்பா -
உடலுக்கு அதிக வலிமையும், சுகமும் உண்டாக்கும். இதில் சிறிது பித்தமும் அதிகரிக்கும்.
54.சீதாபோகம் -
உடல் பலம், தேக பளபளப்பு, விந்து விருத்தி உண்டாகும். அஜீரணத்தை குறைக்கும்.
55.புழுகுச்சம்பா -
இந்த அரிசியை உண்பவர்களுக்கு வனப்பும், அமைதியும், பசியையும், பலமும் உண்டாக்கும். தாகம் நீங்கும்.
56.மணக்கத்தை -
தோல் நோய்கள் அனைத்தையும் போக்கும். புண்கள், ரணங்கள் ஆகியவற்றை குறைக்கும்.
57.மணிச்சம்பா -
அளவுக்கு அதிகமாக சிறுநீரை குறைக்கும். குழந்தை, முதியவர்களுக்கு அதிகசுகத்தை உண்டாக்கும்.
58.மல்லிகை சம்பா -
நாவிற்கு மிகவும் ருசியானது. தேகத்திற்கு சுகத்தையும், உறுதியையும் தரும். கரப்பான், பிரமோகம், உடல் வெப்பம் ஆகியவற்றை போக்கும்.
59.மிளகு சம்பா -
உடலுக்கு சுகத்தை தரும். பசியை உண்டாக்கும். வாதம் போன்ற பல விதமான ரோகத்தை போக்கும்.
60.மைச்சம்பா -
வாதம், பித்தம் போன்ற கோளாறுகளை குறைக்கும். வாத கோபம்,வாந்தி போன்றவற்றை போக்கும்.
61.வளைத்தடிச் சம்பா -
வாத, பித்த தொந்தரவு, வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல், கரப்பான் ஆகியவற்றை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.
62.வாலான் அரிசி -
மந்தம், தளர்ச்சி முதலியவை குறையும். உடலுக்கு அழகும், கொழுமையும் உண்டாக்கும்.
63.மூங்கில் அரிசி -
மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்கள் தான் நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர, உடல் திடம் உண்டாகும், உடல் இறுகும், கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடிவிடும்.
64.கார் அரிசி
அரிசியை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதியடையும். தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மெம்மையாகவும் பட்டுப் போலவும் அமையும்.
65.குண்டு சம்பா
அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நாவறட்சியைத் தீர்க்கும். ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பினியை உண்டாக்கக் கூடும். பசியை மந்திக்கச் செய்யும்.
66.குன்றுமணிச் சம்பா
அரிசியில் வாதக் குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.
67.சீரகச் சம்பா
சிறுவாத நோய்களைக் குணமாக்கும், இனிப்புள்ளது. சாப்பிட தூண்டும்.
68.கோரைச் சம்பா
அரிசி வாதப்பித்த நோய்களைக் குணப்படுத்தும். உடலிற்கு நல்ல குளிர்ச்சி இயல்பைத் தரும். குளிர்ச்சி தரும். உட்சூடு, நமைச்சல், அதிமூத்திரம் இவைகளை நீக்கும்
69.ஈர்க்கு சம்பா
சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறுகளை உண்டாக்கக் கூடும்.
70.நவரா அரிசி
நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான உணவாக கருதப்படுகிறது. நரம்பு தசைக் கோளாறுகளை குணப்படுத்தப் கேரள பாரம்பரிய மருத்துவத்தின் சிறப்பு சிகிச்சையான (Navarakizhi) பயன்படுத்தப்படுக்கிறது. மூட்டுகளின் விறைப்பை நீக்குகிறது, உடற்கழிவுகளை சுத்தம் செய்கிறது மற்றும் இரத்த ஓட்டம் சீராக உதவுகிறது.
இந்த பாரம்பரிய அரிசி எதுவும் உரமோ, பூச்சி கொல்லி மருந்தோ இல்லாமலேயே வளரக்கூடியது. மேற்காணும் அரிசி வகைகள் தானாக வளரக்கூடியது . தானே எதிர்ப்பு திறனுடன் வளர்வதால் இந்த அரிசியை உன்னுபவர்களுக்கும் அதே எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வல்லமை கொண்டது .
பாரம்பரிய அரிசி உண்போம் . ஆரோக்கியத்தை பேணி, ஆயுளை அதிகரிப்போம்.
தொகுப்பாளர் ரா. பொன்னம்பலம் அவர்களின் 'நெல் அதிகாரம் 'என்ற புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது.