60 வயது தாண்டியவர்கள் செக்ஸில் ஏன் ஆர்வம் காட்டுவதில்லை?

By News Room

விலங்குகளுக்கு செக்ஸ் உணர்வு ஏற்படுத்தும் ஹார்மோன்கள்தான். சீஸனுக்கு ஏற்ப வருடத்தின் சில மாதங்களில் ஹார்மோன்கள் தூண்டப்பட்டு விலங்குகள் இனப் பெருக்கம் செய்கிறது.

ஆனால் மனிதனுக்கு ஹார்மோன்கள் மட்டுமில்லாமல் அவர்களுக்குள்ள மூளை செயல்திறனுக்கு ஏற்ப செக்ஸில் ஈடுபாட்டை ஏற்படுத்தும்.

பெண்களுக்கு மாதவிடாய் இருக்கும் வரை செக்ஸ் உணர்வானது அவர்களுக்கு இருக்கும். குறிப்பிட்ட வயதுக்குப் பின் மாதவிடாய் முழுமையாக நின்றபின் செக்ஸில் ஆர்வம் குறைவாக இருக்கும்.  ஏனென்றால், பெண்களின் பிறப்பு உறுப்புகள் சுருங்கிய நிலையில் உலர்ந்து போய்விடும் என்பதால் வலி ஏற்படும் என்ற அச்சத்தில் செக்ஸ் உணர்வு குறைந்து விடும்.

ஆண்களுக்கு இறக்கும் வரை செக்ஸ் உணர்வானது இருந்துகொண்டே இருக்கும். நெஞ்சுவலி, முதுகுவலி, சர்க்கரை நோய் உள்ள ஆண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது.

60 வயதை கடந்தவரள், இருப்பினும் 60%  தம்பதிகள் செக்ஸில் மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் 20% தம்பதிகள்  சுய இன்பத்தில்  ஈடுபட்டு தங்களது ஆசைகளை தீர்த்துக்கொள்கின்றனர்.

ஆனால் சில தம்பதிகள் இவ்வாறு சுய இன்பத்தை விரும்பாமலும், இதனை பாவச் செயல் என்பதாலும் குற்ற உணர்வால் அவதிப் படுகிறார்கள்.

60 வயது கடந்தவர்கள் செக்ஸ் என்பதை நாகரீகம் அல்ல என கருதி சில சாக்கு போக்குகளை கூறி தவிர்த்து, இறைவனை அப்போது தான் அடைய முடியும் என தனது ஆசைகளை அடக்கி ஆள்கிறார்கள்.

ஆண்களுக்கான செக்ஸில் கடைபிடிக்க சில டிப்ஸ்கள்...

உங்களின் விருப்ப உணர்வை மனைவியிடம் எடுத்துகூறுங்கள். மேலும் 60 வயதை கடந்தவர்கள் எனில் செக்ஸ் என்ற உணர்வில் எந்த தவறும் இல்லை என்பதை கூறி கூச்சத்தை போக்க வேண்டும்.

செக்ஸ் என்பது உடலுறவு மட்டுமில்லை. மனைவியிடம் அன்பாக பேசுவது, ஆரத் தழுவுவது, முத்தம் இடுவது மற்றும் பழைய நினைவுகள் கூறி அசைப்போடுவது.

முன்கூட்டியே மனைவியிடம் தங்களின் செக்ஸ் உணர்வை புரியவைத்து அவர்களை தயார் படுத்துவது.

ஒரே நாளில் அதிகப்படியான உடலுறவு கொள்வது பெண்களுக்கு வெறுப்பை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

கணவன் மனைவியின் உடல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு செக்ஸுக்கு அப்ரோச் செய்வது நல்லது.

.
மேலும்