கோமுகி தீர்த்தம் பரிகாரம்?

By Tejas

ஆலயங்களில்  மூலவர் சன்னதியை தரிசித்து விட்டு, வலமிருந்து இடமாக வரும் போது ஒரு இடத்தில் அபிஷேக நீர் வழிந்து கொண்டிருக்கும்.  இதற்கு கோமுகி தீர்த்தம் என்று பெயர்.

 

அபிஷேகம் நடந்தவுடன் இறைவனின் திருமேனியை தழுவிக் கொண்டு வழிந்தோடும் புனித நீர் கோமுகி தீர்த்தம் வழியாக வெளியேறும். இந்த நீர் 90 நாட்கள் கெடாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.இந்த நீரை நாம் சில தருணங்களில் வலது கையை ஒருங்கிணைத்து பிடித்து தலையில் தெளித்துக் கொண்டிருப்போம் அல்லது அருந்துவது போல் பாவனை செய்துவிட்டு, தலையில் தடவிக் கொண்டிருப்போம். இதனை  நம்முடைய பிரச்சனைகளை தீரும் பரிகாரம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 

பரணி மற்றும் மக நட்சத்திர தினத்தன்று சிவாலயங்களில் அபிஷேகம் செய்து வரும் நீரை பிடித்து தீர்த்தம் (கோமுகி தீர்த்தம்) போல் அருந்தி வந்தாலும் உங்களுடைய எல்லா கஷ்டங்களுக்கும் தீர்வு கிடைக்கும்.

 

மிருகசீரிஷம் நட்சத்திரத்திர தினத்தன்று இந்த கோமுகி தீர்த்தத்தை அருந்தினால், பேய், பிசாசு பயம் அகலும்.

 

அஸ்வினி நட்சத்திர தினத்தன்று இந்த கோமுகி தீர்த்தத்தை அருந்தினால், கண் தொடர்பான கோளாறுகள் நீங்கும்.

 

அது மட்டுமல்லாமல் உறக்கத்தின் போது புலம்புபவர்கள் உளறுபவர்கள் கனா கண்டு அழுபவர்கள் ஆகியோர்களும் இந்த அஸ்வினி நட்சத்திர தினத்தன்று கோமுகி தீர்த்தத்தை அருந்தினால் நல்ல பலன் கிட்டும்.

 

பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைய வேண்டும் என்றால், தம்பதிகள் இருவர்களும் தனித்தனியாக கிருத்திகை நட்சத்திர தினத்தன்று கோமுகி தீர்த்தத்தை அருந்தினால், இருவருக்கும் இடையே உள்ள மனப் பிணக்குகள் தீர்ந்து ஒன்றிணைவர்.

 

குழந்தை பேறில்லாதவர்கள் ரோகிணி நட்சத்திர தினத்தன்று அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த புனித நீர் கோமுகி தீர்த்தம் வழியாக வரும் போது அதனைப் பிடித்து அருந்தினால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

 

சிலர் தங்களது இறுதி காலகட்டத்தின் போது படுக்கையில் இருந்தபடி  மனம் வருந்துவர். இவர்களுக்கு திருவாதிரை நட்சத்திர நாளன்று கோமுகி தீர்த்தத்தை அருந்த வைத்தால் அல்லது அருந்தினால் அவர்களது பாவம் தொலையும். நற்கதி அடைவர்.

 

சிலர் தாங்கள் வாழும் காலத்தில் செய்த பாவங்களை தொலைப்பதற்காக பசுக்களுக்கு அகத்திக்கீரை, புண்ணாக்கு உள்ளிட்ட அதற்குண்டான உணவுப் பொருள்களை வாங்கித் தருவர் இதனால் பசுக்கள் பாதிக்கப்படும்.

 

இத்தகைய பாதிப்பினை எதிர்கொள்ளும் பசுக்களுக்கு அதனை வளர்ப்பவர்கள் அல்லது ஆதரிப்பவர்கள் பூச நட்சத்திர தினத்தன்று கோமுகி தீர்த்தத்தை பிடித்து அதனை பசுவை அருந்த வைத்தால் பசு மீண்டும் ஆரோக்கியமாக உலா வரும்.

 

வியாபாரிகள் ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று கோமுகி தீர்த்தத்தை பிடித்து, அதனை தங்களுடைய வியாபார பொருட்கள் மீது தெளித்தால் லாபம் அதிகரிக்கும்.

 

வைத்தியர்களும், சத்திர சிகிச்சை நிபுணர்களும் பூர நட்சத்திர தினத்தன்று கோமுகி தீர்த்தத்தை அருந்தினால், அவர்களின் தொழில் சிறக்கும். 

 

பல்வேறு தடைகளுக்குப் பிறகு திருமண நிச்சயம் நடைபெற்று, அதன் பிறகு சில விவரிக்க இயலாத காரணங்களால் திருமணம் கைகூடாமல் நின்றுவிடும். வேறு சிலருக்கு சொல்ல முடியாத காரணங்களால் திருமணத்தடை தொடர்ந்து கொண்டிருக்கும். 

 

இவர்கள் அனுஷ நட்சத்திரத்தன்று கோமுகி தீர்த்தத்தை அருந்தத் தொடங்கினால்,  அதனை தொடர்ந்து மேற்கொண்டால் திருமண தடை அகன்று மண மேடையில் மணமுடித்து மண வாழ்க்கையில் உற்சாகமாக ஈடுபடலாம்.

 

இயல்பாக படிக்கும் மாணாக்கர்கள் தேர்வு காலங்களில் தேர்வு எழுதும் போது மட்டும் அவர்களுக்கு இனம் புரியாத மன பயம் உண்டாகும். இதனால் தேர்வினை எழுதவே தயங்குவர். இவர்கள் கேட்டை நட்சத்திர தினத்தன்று கோமுகி தீர்த்தத்தை அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

 

சித்தி அடைவதற்காக கேட்டை நட்சத்திர தினத்தன்று கோமுகி தீர்த்தத்தை அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும். எதிர்பார்த்ததை விட சிறப்பான பேறுகளைப்  பெற்று சித்தி எய்துவர்.

 

வீடுகளில் உணவு பஞ்சம் என்பது எப்போதும் ஏற்படக்கூடாது என்று எண்ணுபவர்கள், பெருமாள் ஆலயங்களுக்கு சென்று அங்குள்ள கோமுகி தீர்த்தத்தை திருவோணம் நட்சத்திரத்தன்று பிடித்து அருந்தினால் உணவு பஞ்சம் ஏற்படாது. 

 

எதிரிகள் தொல்லை நீங்க சதய நட்சத்திர நாளில் கோமுகி தீர்த்தத்தை அருந்தினால் எதிரிகள் மறைவர்.

 

விபத்து தொடர்பான பயம் இருப்பவர்கள், ரேவதி நட்சத்திர தினத்தன்று கோமுகி தீர்த்தத்தை அருந்தினால் அந்த பயம் விலகி விடும்.

 

பெரும்பாலும் தினசரி  காலையில் முதல் முறையாக மேற்கொள்ளப்படும் அபிஷேகங்களிலிருந்து வெளியாகும் தீர்த்தத்தில்தான் அதிக பலன் உண்டு அல்லது சில ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் என காலை வேளையில் மேற்கொள்வர். அந்த தீர்த்தத்தையும் கோமுகியில் பிடித்து அருந்தலாம்.

 

மேலும் நூறாண்டுகளுக்கு மேல் தொன்மை வாய்ந்த ஆலயம், மற்றும் ஆறு கால பூஜை செய்யும் கோவில்களில் பரிகாரம் செய்யவும்.

.
மேலும்