மே மாதம் 2025 - கன்னி ராசி பலன்கள்

By News Room

கன்னிராசி நண்பர்களே இந்த மேமாதம் குருபெயர்ச்சர மற்றும் ராகு+கேது பெயர்ச்சி நடைபெறுகிறது இந்த கிரக பெயர்ச்சிகள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம்.

ராசிக்கு 7+ம் இடத்தில் இருந்த ராகு பகவான் மே மாதம் 18-ம் தேதி வரக்கூடிய ராகு +கேது பெயர்ச்சியில் ராசிக்கு 6-ம் இடமான உபஜெய ஸ்தானத்துக்கு பின்னோக்கி வருகிறார் இதனால் மன அமைதியும் சந்தோஷமும் கிடைக்கும் நினைத்த காரியம் யாவும் வெற்றியை தேடி தரும் கடன் சுமைகள் குறையும் பண வரவுகள் நன்றாக இருக்கும் வெளிநாடு வேலை வாய்ப்புகள் உருவாகும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் பெறுவீர்கள் வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும் புதிய சொத்துக்கள் வாங்க முடியும்.

ராசிக்கு 9-ம் இடத்திலிருந்து யோகங்களை வழங்கி வந்த குரு பகவான் மே மாதம் 14-ம் தேதி நடைபெறக்கூடிய குரு பெயர்ச்சியில் 10-ம் இடத்திற்கு வருகிறார் பத்தாம் இடம் என்பது தொழில் வளத்தை குறிக்கக்கூடிய இடமாக கருதப்படுகிறது பத்தில் குரு தொழில் நஷ்டங்களை உண்டு பண்ணுவார் என்பது ஜோதிட விதி குரு இயற்க்கை சுபத்துவம் பெற்ற கோள் என்பதால் பெரிய பாதிப்புகளை வழங்க மாட்டார் தொழில்களுக்காக புதிதாக முதலீடுகள் எதையும் போடாதீர்கள், வரக்கூடிய வருமானம் வந்து கொண்டே இருக்கும் ஆடம்பரை செலவுகளை தவிர்ப்பது நல்லது யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை.

ராசிக்குள் இருந்த கேது 12-ம் இடத்திற்கு பின்னோக்கி செல்கிறார் 12-ம் இடம் என்பது விரைய ஸ்தானமாக கருதப்படுவதால் வேலைக்கு செல்லும் எண்ணங்கள் இருக்காது வேலையில் வேலைப்பளூ அதிகமாக காணப்படும் மன உளைச்சலும் சங்கடங்களும் உருவாகும் தேவையில்லாத பகைகள் வந்து சேரும் உத்யோகத்தில் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள் அடிக்கடி ஆன்மீக சுற்றுலா சென்று வருவதால் பணவிரயங்கள் உண்டாகும் கடன் வாங்கும் சூழல் உருவாகும் தேவையின்றி கடன் வாங்குவதை தவிர்க்கவும் சொத்துக்கள் வாங்கும் பொழுது கவனமாக இருக்கவும் பத்திர பதிவுகளில் கவனத்தை செலுத்துங்கள்.

பரிகாரம்! வாரம் தோறும் வரக்கூடிய புதன்கிழமைகளில் வாராஹி அம்மனுக்கு அர்ச்சனையும் வழிபாடும் செய்து வாருங்கள்   அமாவாசை அல்லது பௌர்ணமி திதியன்று குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.

.
மேலும்