கும்ப ராசி நண்பர்களே, இந்த மே மாதம் நடைபெறக்கூடிய குரு பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம்.
நான்காம் இடத்தில் இருந்த குரு பகவான் மே மாதம் 14ஆம் தேதி நடைபெறக்கூடிய குரு பெயர்ச்சிகள் ராசிக்கு 5-ம் இடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்துக்கு செல்கிறார் இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் தொழில் வியாபாரங்கள் நல்ல லாபத்தை தரும் கணவன் மனைவி உறவு பலப்படும் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு சிலருக்கு சொத்துக்கள் வாங்கவும் புது வீடு கட்டும் அமைப்பும் உள்ளது குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் தடைபட்ட திருமணங்கள் தடையின்றி அமையும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள் தந்தை (மகன்) மகளுக்குள் இருந்து வந்த மனஸ்தாபங்கள் அகலும் குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
ராசிக்கு 12-ம் இடமான விரைய ஸ்தானத்திஞ் இருந்த ராகு மே மாதம் 18-ம் தேதி நடைபெறக்கூடிய ராகு+கேது பெயர்ச்சியில் ராகு ஜென்மத்துக்குள் வருகிறார் ராசிக்குள் ராகு வருவதால் மனக்குழப்பங்கள் உண்டாகும் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனத்தை செலுத்துங்கள் சூதாட்டங்களில் பணம் இழக்கும் அபாயம் உள்ளது அந்நிய நபர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள் ஜாமின் கையெழுத்துக்கள் தவிர்க்கவும் பங்குச் சந்தை முதலீடுகள் செய்யாதீர்கள்.
ராசிக்கு 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் இருந்த கேது 7-ம் இடத்திற்கு பின்னோக்கி வருகிறார் இதனால் குடும்பத்துக்குள் தேவையில்லாத விவாதங்கள் வரக்கூடும் குடும்ப உறவுகளை பகைத்துக் கொள்ளாதீர்கள் அடிக்கடி உடல் நல பிரச்சனைகள் வரக்கூடும் மருத்துவ செலவுகளும் உண்டாகும் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். யாரையும் தேவையில்லாமல் பகைத்துக் கொள்ளாதீர்கள் தேவையில்லாத விவகாரங்களில் தலையிடாதீர்கள் ஆன்மீகப் பயணங்களால் மனம் அமைதி பெறும்.
பரிகாரம்! வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனையும் சதுர்த்தி தினத்தில் வழிபாடும் செய்து வாருங்கள் ஊர்க்காவல் தெய்வங்களை வணங்கி வாருங்கள் குலதெய்வ வழிபாடும் சிறப்பை தரும் நல்லதே நடக்கும்.