மே மாதம் 2025 - மகரம் ராசி பலன்கள்

By News Room

மகர ராசி நண்பர்களே, இந்த மே மாதம் நடைபெறக்கூடிய குரு பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம்.

ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்த குரு பகவான் மே மாதம் 14ஆம் தேதி நடைபெறக்கூடிய குரு பெயர்சியில் ஆறாம் இடத்திற்கு செல்கிறார் ஆறாம் இடம் என்பது ருட ஸ்தானமாக கருதப்படுகிறது சுபத்துவம் பெற்ற கோலான குரு பகவான் ஆறாம் இடத்திற்கு செல்வது அவ்வளவு சிறப்பு இல்லை தொழில் வியாபாரங்கள் சிறிது மந்த நிலை ஏற்படுத்தும் தொழில்களுக்காக புதிய முதலீடுகள் எதையும் போடாதீர்கள் வரக்கூடிய வருமானம் வந்து கொண்டே இருக்கும் தேவை இன்றி கடன்கள் வாங்காதீர்கள் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சிறு மனஸ்தாபங்கள் உருவாகும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் சகோதர வகையில் சிறு இடையூறுகள் வரலாம் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது.

மே 18ஆம் தேதி நடைபெறக்கூடிய ராகு கேது பெயர்ச்சியில் மூன்றாம் இடத்தில் இருந்த ராகு பகவான் இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்திற்கு பின்னோக்கி வருகிறார் வீண் விரய செலவுகளால் கையிருப்புகள் கரையும் கடன் வாங்கும் சூழல் ஏற்படும் வேலையில் பணிச்சுமை அதிகமாக காணப்படும் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது உணவு விஷயத்தில் கவனத்துடன் செயல்படுங்கள் கண்ட கண்ட உணவுகள் சாப்பிட்டு நோய்கள் உருவாக்கிக் கொள்வீர்கள் உங்களின் ஆதிக்க போக்கினால் மற்றவரிடம் விரோதம் ஏற்படும் வாழ்க்கைத் துணையை அதிகாரம் செய்வார்கள் ஈகோ பார்ப்பார்கள்.

மருத்துவ விரைவு செலவுகள் வரக்கூடும் வீண் தண்ட செலவுகளை செய்ய வேண்டாம்.

குருவும் ராகுவும் பலன் தரவில்லை என்றாலும் ஐந்தாம் இடத்தில் இருந்த கேது பகவான் ஆறாம் இடமான உபஜெய ஸ்தானத்துக்கு செல்வதால் கேதுவால் நன்மைகள் உண்டாகும் மன தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும் எதையும் இருந்த இடத்திலிருந்து சாதித்து காட்டுவீர்கள் வெளிநாடு வேலை வாய்ப்புகள் தேடி வரும் வெளிநாடு தொடர்புடைய தொழில்கள் நல்ல லாபத்தை தரும் வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் கோயில் வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வருவீர்கள் குலதெய்வத்தின் ஆசிகள் கிடைக்கும் .

பரிகாரம்! வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் காலபைரவருக்கு அர்ச்சனை செய்து வாருங்கள் சண்டிகரேஸ்வரர்  வழிபாடும் சிறப்பை தரும் நல்லதே நடக்கும்.

 

.
மேலும்