மே மாதம் 2025 - மீனம் ராசி பலன்கள்

By News Room

மீன ராசி நண்பர்களே, இந்த மே மாதம் நடைபெறக்கூடிய குரு பெயர்ச்சி மற்றும் ராகு+ கேது பெயற்ச்சி பலன்கள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம்.

இதுவரை 7-ம் ஸ்தானத்தில் இருந்த கேது பகவான் உபஜெய ஸ்தானமான 6-ம் இடத்திற்கு வருகிறார் ஏழாம் பாவகம் என்பது பல குளறுபடிகள் உண்டு பண்ண கூடிய இடம் தற்சமயம் நடைபெறக்கூடிய ராகு+ கேது பெயர்ச்சி பலன்களில் கேது ஆறாம் இடத்துக்கு வருவது மிகுந்த நற்பலன்களை வழங்குவார் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். மனதில் அமைதி பிறக்கும் சோம்பல் அகலும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் எடுத்த காரியம் யாவும் வெற்றியை தேடித் தரும் போட்டி தேர்வுகள் எளிதாக வெற்றி பெறுவீர்கள் அரசியல் செல்வாக்கு கூடும்.

3-ம் இடத்தில் இருந்த குரு பகவான் மே மாதம் 14-ம் தேதி நடைபெறக்கூடிய குரு பெயர்சியில் ராசிக்கு 4-ம் இடத்துக்கு செல்கிறார் குருபகவான் சுபத்துவம் பெற்ற கோள் என்பதால் பெரிய பாதிப்புகளை வழங்க மாட்டார் தாயாருக்கு அடிக்கடி மருத்துவ செலவுகள் உண்டாகும் .

வீண் விரைய செலவுகளை தவிர்ப்பது நன்று தேவையில்லாத ஆடம்பர பொருட்கள் வாங்கி குவிக்க வேண்டாம் முடிந்த அளவு கடன் வாங்குவதை தவிர்க்கவும் வேலையில் பணிச்சுமை சற்று அதிகமாக காணப்படும் கடினமாக உழைக்க வேண்டி வரும் வரவுக்கேற்ற செலவுகளும் உண்டாகும் கணவன் மனைவிக்குள் தேவையில்லாத ஈகோ பிரச்சனைகள் தலை தூக்கும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நன்று.

ராசிக்குள் இருந்த ராகு பகவான் மே மாதம் 18-ம் தேதி நடைபெறக்கூடிய ராகு+ கேது பெயர்ச்சியில் ராகு 12-ம் இடத்துக்கு பின்னோக்கி செல்கிறார் 12-ம் இடம் என்பது விரைய ஸ்தானமாக கருதப்படுகிறது வேலை விஷயமாக வெளியூர் தங்குதல் வெளியூர் பயணங்கள் வெளிநாடு வேலை வாய்ப்புகள் போன்றவற்றை உருவாகும் முகம் தெரியாத அந்நிய நபர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள் தேவையில்லாத விவகாரங்களில் தலையிடாதீர்கள் பெரிய மனிதர்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் உணவு விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும் உடல் நலனில் கவனத்தை செலுத்துங்கள் பங்குசந்தை ட்ரேடிங் போன்ற முதலீடுகளை தவிர்கவும்.

பரிகாரம்!

வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் வராகி அம்மன் வழிபாடும் அர்ச்சனை செய்து வாருங்கள் மாதந்தோறும் வரக்கூடிய பௌர்ணமி அல்லது அமாவாசை திதி அன்று குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.

.
மேலும்