மே மாதம் 2025 - மிதுனம் ராசி பலன்கள்

By News Room

மிதுனராசி நண்பர்களே  இந்த மே மாதத்தில் நடைபெறக்கூடிய குரு பெயர்ச்சி மற்றும் ராகு+கேது பெயர்ச்சி பலன்களில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம்.

12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் அமர்ந்த குரு பகவான் 14-ம் தேதி நடைபெறக்கூடிய குரு பெயர்ச்சியில் ராசிக்குள் வருகிறார் பொதுவாகவே ஜென்ம குரு ராசிக்குள் வரும் பொழுது சில குளறுபடிகளை உண்டு பண்ணுவார் அவ்வகையில் வீண் ஆடம்பர செலவுகளை குறைப்பது நன்று பண சேமிப்புகள் கரையும் சூழல் உருவாகும் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள் பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை பணம் சேமிப்புகளில் கவனத்தை செலுத்துங்கள் தனியார் நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.

மே மாதம் 18ஆம் தேதி நடைபெறக்கூடிய ராகு கேது பெயர்ச்சிகள் நான்காம் இடத்தில் இருந்த கேது பகவான் மூன்றாம் இடத்துக்கு பின்னோக்கி வருகிறார் தீய கோள்கள் 3,6,10,11-ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்கள் உபஜெய ஸ்தானமாக கருதப்படுகிறது அவ்வகையில் கேது உங்கள் ராசிக்கு பல நன்மைகளை வாரி வழங்குவார் வெளிநாடு தொடர்புகள் உண்டாகும் வெளிநாடு தொழில் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும் ஆன்மீக எண்ணங்கள் உதிக்கும் கோயில் தலங்களுக்கு சென்று வருவீர்கள் தேக ஆரோக்கியம் காணப்படும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும் வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

10-ம் இடத்திலிருந்த ராகு இந்த ராகு +கேது பெயர்ச்சியில் ராசிக்கு 9-ம் இடத்திற்கு பின்னோக்கி செல்கிறார் 9-ம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குறிக்கும் தந்தை ஸ்தானமாக கருதப்படுகிறது 9-ம் இடத்தில் ராகு அமரும் பொழுது பூர்வீக சொத்து பிரச்சனைகள் வரக்கூடும் தந்தை மகனுக்குள் தேவையில்லாத வீண் விவாதங்கள் உருவாகும் சொத்து பிரச்சனைகள் தோன்றும் சகோதர வழியில் தேவையில்லாத மனஸ்தாபங்களும் உருவாகும் அந்நிய மொழிக்காரர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள்.

உதவி செய்ய போக உபத்திரமாக மாற வாய்பு உள்ளது கவனம்.

பரிகாரம்! வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் ராகுகால நேரத்தில் துர்கை அம்மனுக்கு தீபமேற்றி வழிபாடு செய்து வாருங்கள் குலதெய்வ கோயிலுக்கு அமாவாசை திதியன்று சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.

.
மேலும்