விருச்சிகராசி நண்பர்களே மேமாதம் நடைபெறக்கூடிய குருபெயரர்ச்சி மற்றும் ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம்.
மே மாதம் 14-ம் தேதி நடைபெறக்கூடிய குரு பெயர்ச்சியில் ஏழாம் ஸ்தானத்தில் இருந்த குருபகவான் அஷ்டமஸ்தானமான 8-ம் இடத்திற்கு செல்கிறார் 7-ம் இடத்தில் இருந்த குருபகவான் நற்பலன்களை வழங்கி இருப்பார் தற்சமயம் நடைபெறக்கூடிய குரு பெயர்ச்சியில் எட்டாம் இடம் என்பது நன்மைகளை தரக்கூடிய இடமாக இல்லை இதனால் பண விரயங்கள் உண்டாகும் ஆடம்ப செலவுகளை குறைப்பது நன்று பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் செலுத்துங்கள் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள் தொழில் வியாபாரத்திற்காக புதிய முதலீடுகள் எதையும் போடாதீர்கள் வரக்கூடிய வருமானம் வந்து கொண்டே இருக்கும் குரு பகவான் சுபத்துவம் பெற்ற கோள் என்பதால் பெரிய பாதிப்புகளை வழங்க மாட்டார் அதனால் இந்த குருபெயர்ச்சி என்பது பெரிய பாதிப்புகளை தர மாட்டார். அதனால் கவலை எதுவும் கொள்ளாதீர்கள்.
மே மாதம் 18-ம் தேதி நடைபெறக்கூடிய ராகு+ கேது பெயர்ச்சியில் 5-ம் இடத்தில் இருந்த ராகுபகவான் 4-ம் இடத்திற்கு பின்னோக்கி வருகிறார் இதனால் மன சங்கடங்கள் உண்டாகும் தாயாரிடம் வாக்குவாதங்கள் எதையும் செய்யாதீர்கள் தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள் நிலம் பூமி மண்மனை வாங்கும் பொழுது பத்திர பதிவுகளில் மிகுந்த கவனம் செலுத்துங்கள்.முறையான பத்திர பதிவுகள் செய்யுங்கள்.அன்னிய நபர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள் வேலையில் பணிச்சுமை காணப்படும் பணியிட மாற்றங்கள் செய்யாதீர்கள்.
அவரப்பட்டு வேலையை விட்டவிடாதீர்கள்.
ராசிக்கு 11-ம் இடத்தில் இருந்த கேதுபகவான் இந்த ராகு+ கேது பெயர்ச்சியில் பத்தாம் இடத்திற்கு பின்னோக்கி செல்கிறார் இதனால் கேதுவால் நற்பலன்கள் வழங்க முடியும் அசுபம் பெற்ற கோள்கள் 3,6,10,11, ஆகிய இடங்கள் உபஜெய ஸ்தானங்களாக கருதப்படுவதால் கேது 10-ம் இடத்தில் நற்பலன்களை வழங்குவார் மருத்துவ நிறைய செலவுகள் கட்டுக்குள் வரும் மனம் அமைதி பெறும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் ஆன்மீக எண்ணங்கள் உதிக்கும் கோயில் தளங்களுக்கு சென்று வருவீர்கள். எதார்பாராத விதமாக தன வரவுகளால் பண தேவைகள் பூர்த்தியாகும்.
பரிகாரம்!
வாரந்தோறும் வரக்கூடிய செவ்வாய் கிழமைகளில் அருகில் உள்ள மலைக்கோயில் அமர்ந்திருக்கும் முருகப்பெருமானுக்கு ஆறு செவ்வாய்க்கிழமைகளில் ஆறு அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து ஆறு முறை கோயில் பிரகாரத்தை சுத்தி வாருங்கள். நல்லதே நடக்கும் வாருங்கள்.