நெல்லிக்கனி விளக்கை மகாலட்சுமிக்கு ஏற்றுவது ஏன்?

By Tejas

ஒரு முறை சங்கராச்சாரியார் வீடு வீடாக சென்று பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பிராமண பெண்ணிடம் வீட்டை அடைந்தார். அந்த அம்மையார் மிகவும் ஏழ்மையான வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தார். அந்த அம்மையார் தரிதிரத்தின் உச்சகட்டத்தில் இருந்தார். அவரிடம் உடுத்திக்கொள்ள நல்ல துணிமணிகள் கூட கிடையாது.

 சங்கராச்சாரியார் அந்த அம்மையார் வீட்டின் முன்பு நின்று சென்று 'பிக்ஷாம் தேகி' என்று கூறினார். அந்த அம்மையாருக்கு மிகவும் வருத்தம் அடைந்தார். ஏனென்றால் அவரிடம் கொடுக்க வீட்டில் எதுவும் இல்லை. அவர்  வீட்டின் கதவைத் மெதுவாக திறந்து சங்கராச்சாரியாரை தேடி வாசலுக்கு வந்தார்.

அங்கே சங்கராச்சாரியாரை வணங்கிவிட்டு தன் கையில் இருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியையும் பிச்சையாக அவர் கையில் கொடுத்தார்.

இதை பார்த்த அவர் மனம் அந்த ஏழ்மை நிலையிலும் இந்த அம்மையார் அவருக்கு கனி‌ ஈந்ததை நினைத்து வருத்தம் அடைந்தது. அதுமட்டுமின்றி ஏற்கனவே அந்த அம்மையாரின் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அந்த நிலைமையிலும் அவர் தானம் அளிக்க முன்வந்தார்.அவர் உண்ணுவதற்கும் அதற்காக வைத்திருந்த அந்த ஒரே ஒரு நெல்லிக்கனியையும் தானமாக கொடுத்துவிட்டார்.

அவர் கொடுத்ததை இவர் பெரிதாக பார்த்தார் ஏனெனில் அக்காலத்தில் அரிசியை கடவுளாக பார்த்தனர்.இதையெல்லாம் நினைத்து சங்கராச்சாரியாரின் கண்களில் இருந்து தாரைதாரையாக நீர் வடிந்தது.அவர் இரு கைகளையும் கூப்பி மகாலட்சுமியை வணங்கி 'கனகதாரா' ஸ்தோத்திரம் பாடினார்.

அவர் மகாலட்சுமியிடம் இந்த தாயின் நல்ல உள்ளத்தை பார்த்து அவர் திரிதிரத்தை செல்வத்ைத அருள சொல்லி வேண்டினார்.

சங்கராச்சாரியாரின் வேண்டுதலை கண்ட மகாலட்சுமி மனம் இறங்கி தங்க நெல்லிக்கனி களை மழையாக அந்த பிராமண அம்மையாரின் வீட்டின் மேல் பொழிந்தார்.இதுவே நெல்லிக்கனியின் சிறப்பு.

மகாலட்சுமி நெல்லிக்கனியில் வாசம் செய்கிறார். எனவே அதில் தீபம் ஏற்றினால் தரித்திரம் நீங்கி லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

.
மேலும்