8 ஆம் எண் அதிர்ஷ்டமே ஏன்?

By saravanan

ஆனால் பகவான் கிருஷ்ணன் எண்டு என்பதே உயர்வு என்று தம் அவதாரத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.

கிருஷ்ணர்_பிறந்தது எட்டாவது திதியான அஷ்டமி திதி நாளில் அதுவும் சிறைச்சாலியின் எட்டாவது அறையில் தேவகிக்கு அவர் எட்டாவது குழந்தை.

தற்காலக் கணக்கீட்டின்படி கிருஷ்ணருடைய பிறந்த தேதி 17 அதாவது 1 + 7 = 8 என்று ஆகிறது. அவர் தன் 125 வயது வரைக்கும் ஜீவித்திருக்கிறார் என்பது புராணக் கணக்கு. இதுவும் எட்டு ஆகிறது. பகவானால் கூறப்பட்ட பகவத் கீதையில் 701 சுலோகங்களிருக்கின்றன.

இதன் கூட்டலும் எட்டு ஆகிறது. கிருஷ்ணருடைய பட்ட மகிஷிகள் 1 ருக்மிணி 2. சத்யபாமா 3. காளிந்தி 4. பத்ரா 5. லக்ஷணா 6. மித்திரவிருந்தா 7. ஜாம்பவதி  8. நாகநாத்ஜி என்று எட்டு பேர்.

கிருஷ்ணன் வெவ்வேறு சொரூபங்களில் எழுந்தருளியிருக்கும் தலங்கள் எட்டு.  அவை 1. பாங்கே பிஹாரி [ விருந்தாவனம்] 2. துவாரகாதீசம் [துவாரகை] 3. ஜகன் நாதர் [பூரி] 4. சைதன்ய மகா பிரபு [ மாயாபூர்  மேற்கு வங்காளம்] 5. ஸ்ரீ நாத்ஜீ [ நாத்துவாரா ராஜஸ்தான்] 6. ஸ்ரீ ஹரி விட்டலர்  [பண்டரிபுரம்] 7. ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் [திருப்பதி] 8. ரண சோட்ஜி { டாகோர் குஜராத் } கிருஷ்ணரின் குண சொரூபங்களும் எட்டு. குசேலரின் நண்பர் ரமிக்கச் செய்வதில் வேணுகானன்.

கோபியர்க்கு ராசலீலா நர்த்தகன் பார்த்தனுக்கு சாரதி கோகுல வாசிகளுக்கு கோகுல ரட்சகன் பசுக்களை மேய்க்கும் இடையன் யசோதையின் செல்வன் மற்றும் கீதை போதகன்.

கோபியர்களில் கிருஷ்ணருக்கு அதிக நெருக்கமானவர்கள் எட்டு பேர். லலிதா விசாகா சித்ரா சண்பகலதா துங்கவித்யா ரங்கதேவி இந்துலேகா மற்றும் சுதேவி.

கிருஷ்ணனின் பரம பக்தர்கள் எண்மர் வல்லபாச்சாரியார்  மீரா நரசிமேத்தா  சூர்தாஸ் சாந்த துக்காராம்   ஞானேஸ்வரர் பக்த போதனா மற்றும் சுவாமி ராமதாஸ் குறை ஏதும் இல்லா கோவிந்தனே இப்படி எட்டுடன் தொடர்ப்பு கொண்டு அதனை உயர்வுபடுத்தியிருக்கிறான் என்பதை ஆராய்ந்து சொன்னவர் குஜராத்தின் வடோதராவைச் சேர்ந்த கிருஷ்ண பக்தர் சஞ்சீவ் ஆச்சார்யா.

.
மேலும்