ராகுவிற்கு தசாவின் அடிப்படையிலான ஒரு சிறப்பு உண்டு
எல்லா கிரகங்களும் 12 ராசிகள் சுற்றி வருகின்றன.
ஆனால் தனது தசா காலங்களை முழுமையாக எடுத்துக் கொள்ளும் ஒரே கிரகம் ராகு மட்டுமே ஆகும்.
ராகுவின் தசா காலங்கள் 18 ஆண்டுகள். ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள் பயணம் செய்வார்.
ஆக 1.5 * 12 ≈ 18 ஆண்டுகள்.
இதே சனி 19 ஆண்டுகள் கணக்கீடு செய்தால் வாய்ப்பே இல்லை. 12 ராசி சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகிறது
அதுபோல குரு 16 ஆண்டுகள் கணக்கீடு செய்தால் 12 ராசிகள் சுற்றிவர 12 ஆண்டுகள் ஆகிறது.
இது மூலம் ராகுவின் பிடியில் சிக்கியவர்கள் மீண்டு வருவது மிகவும் கடினம்.
அதாவது ராகு பகவான் தசா நடக்கும்போது எப்பொழுது கொடுப்பார் எப்பொழுது கெடுப்பார் என்று சொல்லவே முடியாது. எச்சச்ச எச்சச்ச கச்சச்ச....
சுபத்துவம் பெற்றிருக்கிறது என்பார்கள் அங்கே நடப்பது என்னவோ எதிர்மறாக இருக்கும். ஐந்தில் ராகு புத்திர தோஷம் என்பார்கள். ஆனால் குழந்தை மகாலட்சுமி போல வரும்.
அனைத்து இந்து மதத்தினர் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி ராகுவிற்கு உண்டு.