உப்பை ஏன் இரவலாகக் கொடுக்க கூடாது?

By saravanan

மகாலட்சுமிக்கு பிடித்தமான பதார்த்தம் இனிப்பு. இதனால் தான் மகாலட்சுமியை வேண்டி செய்யப்படும் யாகம், பூஜைகளில் இனிப்பு பண்டங்கள் பிரதானமாக வைப்பர்.

காசியில் அன்னபூரணி சன்னதியில் அம்பாள், லட்டு தேரில் புறப்பாடாவாள். இதைப்போல, உப்பும் மகாலட்சுமிக்கு உகந்ததாகும். சமுத்திரராஜனின் மகளான மகாலட்சுமி பாற்கடலில் தோன்றியவள்.

இதனால், கடலில் கிடைக்கும் உப்பும் மகாலட்சுமியின் அம்சம் ஆகிறது. இதனால்தான், இப்போதும் கிராமப்பகுதிகளில் மாலை வேளையில் உப்பை இரவலாகக் கொடுக்கமாட்டர்.

புதிதாக வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்யும்போது, அவர்களது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டுமென்பதற்காக உப்பு கொடுக்கும் வழக்கம் உள்ளது.

"உப்பில்லா பண்டம் குப்பையிலே` என்பர். உப்பில்லாத உணவை எப்படிச் சாப்பிட முடியாதோ, அதைப்போல மகாலட்சுமியின் அருள் இல்லாமல் எந்த செயலையும் செய்ய முடியாது என்பதே உப்பு உணர்த்தும் தத்துவம்.

.
மேலும்