ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் செயல்பாடுகள்?

By News Room

அசுர குருவான சுக்கிராச்சாரியார் மனித வாழ்க்கையின் அனைத்து சுகபோக வாழ்க்கைக்கும் காரகம் வகிப்பவர்.

வீடு, மனை போன்றவற்றிற்கு, செவ்வாய் காரகமாக இருந்தாலும் சுக்கிரன்  இல்லாமல் ஒருவரால் வீடுமனை வாங்குவது  என்பது இயலாது .

குழந்தை காரகர் குருவாக இருந்தாலும், தாம்பத்திய வாழ்க்கைக்கு மிக முக்கியமானவர் சுக்கிரன். சுக்கிரனால் கொடுக்கப்படும் இல்லற சுகம் என்பது இல்லாவிடில் குழந்தைப்பேறு எங்கே? ?

வசீகரம் அழகு என்பது சுக்கிரனால் தரப்படுவது ..தன்னை அழகுபடுத்திக் கொள்ளுதல், (குறிப்பாக பெண்கள்) சிலர் ஆடை ஆபரண பிரியர்களாக இருப்பார்கள் அவர்களுக்கு சுக்கிரன் நல்ல வலுவான நிலையில் இருக்கும். வெகு சிலருக்கு நான்காம் பாவகத்தில் சுக்கிரன் இருந்தாலும் அல்லது தொடர்பு பெற்றாலும் எந்த ஒரு செயலிலும் ஒரு அழகு (Neatness)என்பது இயல்பிலேயே இருக்கும்.

ஆறு மற்றும் பத்தாம் பாவக.த்தோடு சுக்கிரன் தொடர்பு பெற ,அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்தல், Fancy stroes,parlour போன்ற வேலைகள் இவர்களுக்கு கை வந்த கலை ..

என்னதான் ஒருவர் கவித்துவமாக பேசுவதற்கு புதன் காரகம் வகித்தாலும் ஒருவருடைய பேச்சில் நளினமும் காதலும், ஒரு அக்கறையும் வெளிப்படுத்த சுக்கிரனால் மட்டுமே முடியும். (புதன் +சுக்கிரன்) இணைவு பெற்றவர்கள் இயல்பிலேயே கவித்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள் .

சுக்கிரன் ராகு தொடர்பு பெரும் பொழுதும், ராகு சுக்கிரன் சாரம் பெற்று அல்லது சுக்கிரன் ராகுவின் சாரம் பெற்றும் ஜாதகத்தில் இருந்தால், எதிர்பால் இனத்தவரால் ஈர்க்கப்படுவார்கள், ஜவுளித் துறையில் ஒருவர் பிரகாசிப்பதற்கும்,சுக்கிரனின் தயவு இல்லாமல் நடக்காது. சுக்கிரன் ராகு தொடர்பு பெற்றவர்கள் பெண் தெய்வ வழிபாடு சிறப்பிப்பார்கள்.

சுக்கிரன்+ சனி மித்திரர்கள் ..குருவினால் சனி சுபத்துவ படுத்தப்பட்டால் ஆன்மீக பாதைக்கு, சுக்கிரனால் சனி சுபத்துவம் ஆகும்பொழுது லௌகீக வாழ்க்கையிலும் பிரகாசிக்க செய்வார் ..ஒருவர் லௌகீக வாழ்க்கை வாழ்வதற்கு பணம் பொருள் அனைத்து வசதிகளும் தருபவர் சுக்கிரன். அதன் மூலம் கர்மா சேர்க்க வைப்பவர் சனி ..

இதே சுக்கிரனால் வரக் கூடியவை தான், சுரோனிதம், சிறுநீரக சார்ந்த நோய்கள், இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்சனை, பால் உறுப்புகள் சார்ந்த பிரச்சனைகள்

இன்றைய காலகட்டங்களில் புற்றீசல் போல செயற்கை கருத்தரிப்பு மையம் ..பல இடங்களில் பரவி வருவதற்கு காரணம் சுக்கிரன் ஜாதகங்களில் பலம் இழப்பது மட்டுமே ..(சுக்கிரனை activate செய்யக்கூடிய இயற்கை உணவு வகைகளை உட்கொள்ளும் பொழுது குழந்தை பிறப்பு சார்ந்த பிரச்சனைகளில் இருந்து தவிர்க்கலாம்) உதாரணமாக தேனில் ஊறிய நெல்லிக் கனிகள் எடுத்துக்கொள்ளுதல் போன்றவை ...

சமையலில் ஒருவர் கெட்டிக்காரராக சுவைமிகுந்த சமையல் செய்வதற்கு சுய ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருத்தல் அவசியம் .

இப்படி மனித வாழ்வில் ஒவ்வொரு விஷயங்களிலும் சுக்கிரனை கொண்டு இயங்குகின்றன.

.
மேலும்