கோயில் கிணறும் அதிர்ஷ்டமும் என்ன தெரியுமா?

By News Room

சிவ ஆலய கிணறு பாவம் தீர்க்கும்..!...

விஷ்ணு ஆலய கிணறு செல்வம் சேர்க்கும்...!

நீங்கள் எந்த ஆலயத்திற்குள் நுழைந்தாலும் அந்த ஆலயத்தில் கிணறு (கேணி) இருக்கிறதா எனப் பாருங்கள்.

அப்படி கிணறு இருந்தால் அந்த கோயில் உங்களுக்கு செல்வ வளம் தரும்/ பாவம் தீர்க்கும் கோயில் என்பதை முதலில் மனதில் இருத்துங்கள்.

அந்த கோவிலில் பிரதான இறை வழிபாடு தொடங்குவதற்கு முன் முதன் முதலில் அந்த கிணற்றில் உங்கள் முகம் பார்க்கவும்.

பின்பு முகம் கை கால் சுத்தப்படுத்திய பின்பு தெய்வ வழிபாடு செய்யவும்.

ஆலயம் சுற்றி வந்த பின் இறுதியாக  எக்காரணம் கொண்டும் மீண்டும் கிணற்றை பார்க்கக்  கூடாது .இது மிகவும் முக்கியமான கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

ஆலயம் தொழுது வரம் பெற்றபின் இறுதியில் கிணற்று நீரைக் கண்டால் நாம் பெற்ற வரம் அனைத்தும் கிணற்றின்  ஜலம் ஈர்த்துக் கொள்ளும், எனவே வழிபாடு முடிந்து  வீடு திரும்பும்போது எக்காரணம் கொண்டும் கிணற்றை எட்டிப் பார்க்கக் கூடாது.

எப்பொழுதுமே ஆலயத்தில் உள்ள கிணற்றை உற்று நோக்கினாலே நம் செய்த பாவத்தின்  சிறு பங்கு நாம் செய்த தர்மத்தின் பலனாக மாறும் சக்தி கொண்டது என்பதறிக.

ஜலத்தால் பாவத்தையும் போக்கலாம் .

பெற்ற வரன்களை தாரை வார்த்தும் கொடுக்கலாம்.

கோவில் கிணறு எதையும் வாங்கி கிரகித்துக் கொள்ளக் கூடியது.

அதனால்தான் அக்காலத்தில் கோயில் சொத்துக்களையும்  பிள்ளையில்லா சொத்துக்களையும், ஆயுதங்களையும் பாவக்கணக்கு சொத்துக்களையும் விற்க கோயில் ஆலயத்தில் போட்டு விடும் பழக்கம் இருந்தது.

விவரம் அறிந்தவர்கள் இன்றும் பலர் கோயில் கிணற்றில் காசை தலையை சுற்றி போடுவார்கள். அதையும் கோவிலுக்கு உள்ளே செல்லும் போதே செய்வார்கள்.

குறிப்பாக திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தாயார் சன்னதிக்குள் ஒரு கண்ணாடிக்  கிணறு உண்டு, இதில் மகாலட்சுமி அருள் நிரம்பவே உண்டு.

ஆண்டாள் தாயார் தினமும் தன் முகதரிசனத்தை இந்த கிணற்றில் கண்டு வந்ததால் அவள் பெற்ற சௌபாக்கியம் பெருமாளையே மணாளனாக அடைய நேர்ந்தது என்றால் ....

மொத்தத்தில் சிவன் கோவில் கிணறு பாவம் தீர்க்கும்.

பெருமாள் கோயில் கிணறு செல்வ வளம் சேர்க்கும்.

.
மேலும்