திருமண வரம் தரும் பிரம்மச்சாரி விரதம்?

By News Room

ஜோதிட ரீதியாக சிலருக்கு ஜாதகத்தில் பிரச்சனை இருக்க போய் திருமணம் தள்ளிக் கொண்டே செல்லும். வயது ஆக ஆக தான் திருமணம் பற்றிய பயமும் வரும். பெரியோர்கள் கூற்றுப்படி இளமை இருக்கும் போதே திருமணத்தை முடித்து விட வேண்டும். இப்படி திருமணம் ஆகாமல் பிரம்மச்சாரி ஆக இருப்பவர்கள், திருமணம் வேண்டி காத்திருப்பவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் உடனே திருமணம் நடக்கும்.

இந்த பிரம்மச்சாரிய விரதத்தை பற்றிய தகவல்களை தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள். திருமண யோகம் கை கூடி வருவதற்கு, தோஷங்கள் நீங்கி திருமண பந்தத்தில் இணைவதற்கு இந்த பரிகாரத்தை செய்வார்கள். ஆண்கள் தான் செய்ய வேண்டுமா? பெண்களும் செய்யலாமா? என்றால் இரு பாலரும் செய்யலாம். வயது ஆகியும் திருமணம் ஆகாமல் தள்ளிக் கொண்டே செல்லும் பெண்களும், இந்த பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டு பலன் அடையலாம்.

5, 11, 21 வாரங்கள் இந்த பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும். ஐந்து வாரம் உங்களால் இந்த விரதத்தை மேற்கொள்ள முடிந்தால், அடுத்த 11 வாரம் வரை இந்த விரதத்தை தொடரலாம். 11 வாரத்தை கடந்தவர்கள் 21 வாரங்கள் வரை தொடர்ந்து இந்த பரிகாரத்தை மேற்கொள்ளலாம். பெரியநாயகி என்னும் அம்பிகை தாயாருக்கு இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

வீட்டில் அம்பிகையின் முன்பு ஸ்ரீ சக்கரம் ஒன்றை பிரதிஷ்டை செய்யுங்கள். ஒரு பெரிய தாம்பூலத்தில் ஒரு கிலோ மஞ்சள் வாங்கி வையுங்கள். விரதம் முடிந்த பின்பு இந்த மஞ்சளை கோவிலுக்கு தானம் செய்ய வேண்டும். மற்றொரு தாம்பூல தட்டில் பச்சரிசியை பரப்பி அதன் மீது தேங்காயை இரண்டாக உடைத்து அதில் இருக்கும் நீரை பூமிக்கு வார்த்து விட்டு, உள்ளே தேங்காய் எண்ணெயை ஊற்றி வையுங்கள். ஒரு மஞ்சள் துணியில் கொஞ்சம் கோதுமையை வைத்து முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள்.

இதை இரு தேங்காய்களிலும் திரியாக போட வேண்டும். பின்னர் தீபம் ஏற்றி வைத்து கீழ் வரும் இந்த மந்திரத்தை 21 முறை உச்சரியுங்கள். இந்த மந்திரம் பூஜையில் இருக்கும் குறைகளை அகற்றி, உங்கள் பாவங்களை ஏற்று உமையவள் கட்டப்பட்டிருக்கும் உங்களுடைய கர்மங்களை விடுவித்து அருள் புரிவாள்.

அம்பிகை தாயார் ஸ்தோத்திரம்:

அபராத ஸஹஸ்ராணி க்ரியந்தே அஹர்நிஸம் மயா தாஸோயமிதி மாம் மத்வா க்ஷமஸ்வ பரமேஸ்வரி மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஸுரேஸ்வரி யத்பூஜிதம் மயாதேவி பரிபூர்ணம் ததஸ்து மே!!!

பூஜை செய்யும் பொழுது விரதம் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வெள்ளி அன்றும் இந்த பூஜையை செய்ய வேண்டும். ஐந்து வெள்ளிக் கிழமைகள் தொடர்ந்து உணவேதும் உண்ணாமல் விரதம் மேற்கொண்டு அன்றைய நாள் முழுவதும் அம்பிகையின் ஸ்தோத்திரங்கள், பாடல்கள், மந்திரங்கள் போன்றவற்றை உச்சரித்து இந்த பூஜையை மேற்கொள்ள வேண்டும். அம்பிகைக்கு நைவேத்தியம் படைக்க நீர் மோர், சர்க்கரை பொங்கல், உளுந்த வடை போன்றவற்றை வைக்கலாம். சிலரின் உடல் ஆரோக்கியம் விரதத்திற்கு ஒத்து வராது. இவர்கள் நீராகாரத்தை, பழங்களை மட்டும் விரதத்தின் பொழுது எடுத்துக் கொள்ளலாம்.

உடலை வருத்தி தான் விரதத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 5 வாரங்கள் விரதம் மேற்கொண்ட பின்பு உங்களுக்கு புது நம்பிக்கை பிறக்கும். பிறகு அடுத்தடுத்த வாரங்களிலும் தொடர்ந்து 21 வாரங்கள் விரதம் முடிந்த பின்பு பூஜையில் வைக்கப்பட்டுள்ள ஒரு கிலோ மஞ்சளை கோவிலுக்கு தானம் கொடுத்து விடுங்கள். இந்த பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு 21 வாரங்களில் வரன் பார்த்தால் திருமணம் கைகூடி வரும்.

.
மேலும்