இன்றைய ராசி பலன்கள் - (03-12-2024 செவ்வாய் கிழமை)

By saravanan

மேஷம் மேஷ ராசி நண்பர்களே, குடும்ப சிக்கல்கள் குறையும். அலைச்சல் அதிகமாக கணப்படும்.வரவுக்கேற்ப சிலவுகளும் உண்டு. வயிறு உபாதைகள் உண்டாகும். வெளி உணவுகளை தவிர்க்கவும். எதிர்பாராத பயணங்கள் கடினமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷபம் ரிஷப ராசி நண்பர்களே, பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். காரிய தடைகள் விலகும்.பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும். தொழில் வியாபாரங்கள் சீராக இருக்கும் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.

மிதுனம் மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உறவினர்களால் காரியம் கைகூடும் .பொருளாதார நிலை சீராகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.

கடகம் கடக ராசி நண்பர்களே, முக்கிய விஷயங்களை தீர ஆலோசித்து செய்யவும்.மனக்குழப்பம் காணப்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். காரிய அனுகூலம் உண்டாகும். ஆடம்பர சிலவுகள் குறைக்கவும்.தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். .

சிம்மம் சிம்ம ராசி நண்பர்களே, குடும்ப சுமையால் பதட்டம் அதிகரிக்கும். அடிக்கடி டென்ஷன் ஆவதை குறைத்துக்கொள்ளவும். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. சுபகாரியங்கள் மற்றும் திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கன்னி கன்னி ராசி நண்பர்களே, எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகமாகும். குடும்ப பொறுப்புகள் கூடும். நெருங்கிய உறவினர்கள் உதவி அவ்வப்போது கிடைக்கும்.புதிய வாகன யோகமும் சிலருக்கு புது வீடு அமையும் யோகமும் உண்டு லோன் எளிதில் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

துலாம் துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தின் மீது பற்று உண்டாகும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.நண்பர்கள் கேட்ட உதவியை செய்து தர முடியும். ஆன்மீகத்தில் ஈடுபாடு வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.தொழில் வியாபாரங்கள் லாபகரமாக இயங்கும்.

விருச்சிகம் விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப நபர்களால் சில சங்கடம் வரும்.கணவன் மனைவிக்குள் தேவையற்ற விவாதங்கள் நடக்கும். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் பணிச்சுமை குறையும்.தொழில் வியாபாரங்கள் மிதமான லாபத்தை தரும்.

தனுசு தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் எதிர்பார்த்தது கிடைக்கும். எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டம் வரும். கொடுத்த பணம் வசூல் ஆகும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.

மகரம் மகர ராசி நண்பர்களே, புதிய முயற்சிகள் நல்ல பலனை தரும். மனதில் ஏற்பட்ட நேர்மறை சிந்தனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். உத்யோகத்தில் கவனம் தேவை.தொழில் வியாபாரத்துக்கான முதலீடுகள் தவிற்க்கவும்.

கும்பம் கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். விலகி நின்ற நபர்கள் விரும்பி வருவர். கணவன் மனைவி உறவு பலப்படும்.வாகனம் பராமரிப்பு செலவு ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலைகள் நீங்கும்.

மீனம் மீன ராசி நண்பர்களே, தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்.திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உறவினர்களுடன் சின்ன மனஸ்தாபம் வரும்.உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

.
மேலும்