மேஷம் மேஷ ராசி நண்பர்களே, குடும்ப நபர்களை அனுசரித்து போகவும்.யாருக்காககவும் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டாம். நட்பு வழியில் நன்மை ஏற்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.திட்டமிடாத செலவுகள் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபரங்கள் முன்னேற்றத்தை தரும்.
ரிஷபம் ரிஷப ராசி நண்பர்களே, ஆன்மீக வழிபாடு சிறப்பான பலன் தரும்.குலதெய்வ அருள் கிடைக்கும். தான தர்ம சிந்தனை மேலோங்கும். பெரியோர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது. வாகனத்தில் மெதுவாக செல்லவும். அவசர முடிவுகள் தவிற்க்கவும்.தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மிதுனம் மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் சந்தோஷமான விசேஷங்கள் நடக்கும். உங்கள் திறமைகள் வெளிப்படும்.புத்தி கூர்மையால் தடைபட்ட காரியத்தை சாதித்து காட்டுவீர்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.வரவக்கேற்ப சிலவுகளும் உண்டு. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கடகம் கடக ராசி நேயர்களே, பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர்.மருத்துவ சிலவுகள் குறையும் தேகம் ஆரோக்கியம் பெறும். வம்பு சண்டை, சச்சரவுகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கடன் பிரச்சனை ஓரளவு சீராகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
சிம்மம் சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். நல்ல செய்தி காதில் வந்து விழும். கணவன் மனைவிடையே விட்டுக்கொடுத்தல் அவசியம். உத்யோக மாற்றம் ஏற்படும். தொழில் வியாபாரங்கள் சிறப்படையும் வியாபார விஷயமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.
கன்னி கன்னி ராசி நண்பர்களே, மன வலிமை கூடும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.எதையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள்.அருகாமையில் உள்ளவர்கள் ஆதரவாக செயல்படுவர். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
துலாம் துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். எதிர்மறை எண்ணங்கள் விலகும்.பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பும் அவர்களால் உதவிகளும் கிடைக்கும். எதிரிகளின் பலம் குறையும். புது தொழில் யோகம் அமையும்.
விருச்சிகம் விருச்சிக ராசி நண்பர்களே, மனம் மகிழ்ச்சி அடையும் .நற்செய்தி ஒன்று கிடைக்கும்.உறவினர்கள் உதவி செய்வார்கள். குடும்ப நிதி நிலைமை சீரடையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த சிக்கல் நீங்கும்.
தனுசு தனுசு ராசி நண்பர்களே, மற்றவர்கள் கருத்துக்கு செவி சாய்க்க வேண்டாம். பண விவகாரங்களில் கவனம் தேவை.வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மகரம் மகர ராசி நண்பர்களே, பிடிவாதப் போக்கை தளர்த்திக்கொள்ளவும். முன் கோபத்தை தவிற்க்கவும் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் விபாரங்கள் மிதமாக இருக்கும்.
கும்பம் கும்ப ராசி நண்பர்களே, அண்டை, அயலாரிடம் நட்புறவு ஏற்படும். மனம் தெளிவு பெறும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.தவிற்க்க முடியாத திடீர் மருத்துவ செலவுகள் வரும் விரைய சிலவுகள் உண்டாகும் தொழில், வியாபாரம் புதிய பாதையில் செல்லும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
மீனம் மீன ராசி நண்பர்களே, எதிலும் முன்யோசனைவுடன் செயல்படுவது நல்லது. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். திருமண காரியம் கைகூடும்.ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ளுவீர்கள். உத்யோகத்தில் நெருடல்கள் குறையும்.தொழில் வியாபாரம் சீராக இருக்கும்.