மேஷம் மேஷ ராசி நண்பர்களே, பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உறவினர்களிடம் ஏற்பட்ட விரிசல்கள் மறையும். வெளி உணவுகளை தவிர்க்கவும்.உடல் நல பிரச்சனைகள் வரக்கூடும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும்.
ரிஷபம் ரிஷப ராசி நண்பர்களே, கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும்.ஜாமீன் கையெழுத்துக்கள் தவிற்க்கவும். வரவுக்கேற்க சிலவுகள் இருக்கும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். யாரிடத்திலும் அதிகம் உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
மிதுனம் மிதுன ராசி நண்பர்களே, மனம் அமைதி பெறும்.ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ளூவீர்கள். உறவினர்களிடமிருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்
கடகம் கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். தேவையற்ற நட்பு வட்டாரங்களை தவிர்க்கவும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில் எதிரிகள் முளைப்பார்கள். போட்டிகள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
சிம்மம் சிம்ம ராசி நண்பர்களே, மனதில் இனம் புரியா பயம் உண்டாகும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். அடுத்தவரிடம் உதவி கேட்பதில் தயக்கம் ஏற்படும். கணவன் மனைவிடையே இருந்த பகைமை நீங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கன்னி கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும்.சகோதர வழியில் மனஸ்தாபங்கள் உண்டாகும்.
புதிய வாகன யோகம் உண்டு .பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
துலாம் துலாம் ராசி நண்பர்களே, வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். வாக்கு சாமர்த்தியம் உண்டாகும். கணவன் மனைவி உறவு பலப்படும் அன்றாட பணிகளில் கூடுதல் கவனம் தேவை.ை யாரைதொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
விருச்சிகம் விருச்சிக ராசி நண்பர்களே,உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். ரகசியங்களை வெளியில் பகிர வேண்டாம். பயண அலைச்சல் உண்டாகும்.இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
தனுசு தனுசு ராசி நண்பர்களே, மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்.தைரியம் தன்னம்பிக்கை பிறக்கும். பிரியமானவர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.தொழில் வியாபாரத்தில் சாதிப்பீர்கள்.
மகரம் மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.வருங்கால சேமிப்புகள் இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவர். பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கும்பம் கும்ப ராசி நண்பர்களே, பண விஷயத்தில் கறாராக இருக்கவும்.கூடா நட்பு கேடாய் விளையும்.கணவன் மனைவிக்குள் வாக்கு வாதங்கள் வேண்டாம்.ல மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கம்.
மீனம் மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி ஒற்றுமை நிறைந்திருக்கும். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.