மேஷம் மேஷ ராசி நண்பர்களே,பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் உங்களை உயர்வாக பேசுவர்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். நீண்ட விருப்பங்களை நிறைவேற்ற முடியும். எதிரிகள் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
ரிஷபம் ரிஷப ராசி நண்பர்களே, உற்சாகமாக காணப்படுவீர்கள்.மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். புது வீடு மாற்றம் ஏற்படும். மூதாதையர் வழியில் ஆதாயங்களும், அனுகூலங்களும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
மிதுனம் மிதுன ராசி நண்பர்களே, புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள்.மனநிம்மதி ஏற்படும். அடுத்தவருக்கு உதவுவதில் மகிழ்ச்சி உண்டாகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.
கடகம் கடக ராசி நண்பர்களே, குடும்ப பெருமையை உயர்த்த முடியும். இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். புது பொருட்கள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் வியாபாரங்கள் நல்ல லாபத்தை தரும்.
சிம்மம் சிம்ம ராசி நண்பர்களே, உங்கள் திறமையால் பெயர், புகழ் வந்து சேரும். செலவுகளை குறைத்து சேமிக்க பழகவும். தேவையின்றி கடன் வாங்காதீர்கள்.சொத்து பிரச்சனை தலை தூக்கும்.பங்காளிகளுக்குள் மன ஸ்தாபங்கள் வரக்கூடும் தொழில், வியாபாரம் சிறப்படையும்.
கன்னி கன்னி ராசி நண்பர்களே, குடும்ப பொருளாதாரம் சீரடையும். பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். கணவன் மனைவிடையே ஈகோ பிரச்சனை இருக்கும்.விட்டுக்கொடுத்து போவது நல்லது. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
துலாம் துலாம் ராசி நண்பர்களே, குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையும். பெரியோர்களின் அறிவுரை தக்க சமயத்தில் கிடைக்கும். நண்பர்கள் உதவி செயவார்கள்.ஆன்மீக நாட்டம் கூடும். கோயில் தலங்களுக்கு சென்றுவர முடியும்.தொழில், வியபாரத்தில் போட்டிகள் குறையும்.
விருச்சிகம் விருச்சிக ராசி நண்ர்களே, சுற்றி இருப்பவர்களிடம் கவனமாக பழகவும். முன்கோபத்தை தவிற்க்கவும்.பிரியமானவர்கள் வழியில் சில நன்மை உண்டு. தொலைந்து போன முக்கிய ஆவணங்கள் திரும்ப கிடைக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
தொழில் வியாபாரத்தில் உள்ள சூட்சுமங்கள் புரிய வரும்.
தனுசு தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தின் அடிப்படை வசதிகள் உயரும். பணவரவு நன்றாக இருக்கும்.நட்பு வட்டம் விரிவடையும். முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
மகரம் மகர ராசி நண்பர்களே, குடும்பம் குதுகலமாக இருக்கும் சந்தோஷமாக காணப்படுவீர்கள். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யவும். அவசர முடிவுகள் தவிற்க்கவும். பயணத்தின் போது கூடுதல் கவனம் தேவை. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரத்தில் மந்தநிலை நீடிக்கும்.
கும்பம் கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் முக்கிய வேலைகளை முடிவடையும். மனம் தெளிவு பெறும். சந்தோஷமாக காணப்படுவீர்கள்.புது நண்பர்களிடம் நல்லுறவு ஏற்படும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.தொழில் வியாபாரங்கள் செழிப்பைத்தரும்.
மீனம் மீன ராசி நண்பர்களே, எடுத்த காரியத்தை சிறப்பாக செய்ய முடியும். தொடர் வேலைகளால் அலைச்சல் வரக்கூடும். வரவுக்கேற்ப சிலவுகளும் உண்டு.பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புது தொழில் யோகம் அமையும்.வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும்.