இன்றைய ராசி பலன்கள் - 21-11-2024 வியாழ கிழமை

By News Room

மேஷம் மேஷ ராசி நண்பர்களே,மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருடல்கள் குறையும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.

ரிஷபம் ரிஷப ராசி நண்பர்களே, புத்துணர்வு ஏற்படும்.பண வருவாய் நன்றாக இருக்கும்.அக்கம் பக்கத்தாருடன் நல்லுறவு ஏற்படும். ஆடை, ஆபரண பொருள் சேர்க்கை உண்டாகும். விஐபிகளின் தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.

மிதுனம் மிதுன ராசி நண்பர்களே, எதிலும் பொறுமையாக இருந்து சாதிக்கவும். உறவினர்கள் இல்லம் நாடி வருவர். பண வரவில் தாமதம் இருக்கும். கணவன் மனைவிக்கு ஈகோ பிரச்சனை உண்டாகும்.உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிக்கவும்.

கடகம் கடக ராசி நண்பர்களே, பெற்றோரின் தேவையறிந்து செயல்படவும். மன தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். தேவையின்றி கடன் வாங்காதீர்கள். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

சிம்மம் சிம்ம ராசி நண்பர்களே,மன அமைதி கிடைக்கும். பிரியமானவர்களின் சந்திப்பு சந்தோஷத்தை தரும். தான, தர்மம் செய்வதன் மூலம் புண்ணியங்கள் சேரும். கோயில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல முடியும்.சோம்பல் நீங்கி உற்சாகம் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கன்னி கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும் பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.வாகன யோகம் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

துலாம் துலாம் ராசி நண்பர்களே, மனம் யோக, தியானத்தில் ஈடுபாடு கொள்ளும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். நட்பு வழியில் நற்செய்தி உண்டு. பண விவகாரங்கள் கவனம் தேவை.உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.தொழில் வியாபாரங்கள் நல்ல லாபத்தை தரும்.

விருச்சிகம் விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம் சகோதரர்களால் சில இடையூறுகள் வரலாம். பண தேவைகள் பூர்த்தியாகும்.நினைத்த காரியம் நிறைவேறும். பெற்றோரின் அரவணைப்பு கிடைக்கும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்

தனுசு தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்திற்கு தேவையானதை செய்து தர இயலும். இழுபறியில் இருந்த வழக்குகள் சாதகமாக முடியும். பண தேவைகள் அதிகரிக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போட வேண்டாம்.உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரத்தில் மிதமான வருமானம் வரும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.

மகரம் மகர ராசி நண்பர்களே, குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் கூடும்.தேவையின்றி அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கும்பம் கும்ப ராசி நண்பர்களே, புதிய முயற்சிக்கு பலன் கிட்டும். வெளிவட்டாரத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும் அவர்களால் உதவிகளும் கிட்டும்.எதிர்பாராத வீண் விரைய செலவுகள் நிறைய வரும்.கவனம் தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

மீனம் மீன ராசி நண்பர்களே, புதிய உற்சாகம் தோன்றும் மனதில் பட்ட விஷயங்களை நிறைவு செய்வீர்கள்.குடும்ப பொருளாதாரம் ஏற்ற, இறக்கமாக இருக்கும். தடைபட்ட உறவுகள் மீண்டும் துளிர்க்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும்.

.
மேலும்