மேஷம் மேஷ ராசி நண்பர்களே, யாரையும் பகைத்துக்கொள்ளாதீர் .எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிக்கும். இன்று மனக்குழப்பம் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்க வேண்டாம்.
ரிஷபம் ரிஷப ராசி நண்பர்களே, எதிர்பார்க்கும் விஷயங்கள் தானாகவே நடக்கும். வீண் சிலவுகளை குறைப்பது நலம்.வசீகர பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர முடியும். பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
மிதுனம் மிதுன ராசி நண்பர்களே,மனதில் புதிய எண்ணங்கள் உதயமாகும். சவாலான வேலைகளையும் எளிதில் முடிக்க முடியும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் இருக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
கடகம் கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.முன் கோபத்தை குறைப்பது நல்லது. கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
சிம்மம் சிம்ம ராசி நண்பர்களே, எல்லா விஷயங்களிலும் விட்டு கொடுத்து போகவும். பண தேவைகள் பூர்த்தியாகும் எதிர்பாராத பணம் கைக்கு கிடைக்கும்.உற்றார் உறவினர்களால் ஆதாயம் உண்டு. உடல் உபாதைகள் நீங்கும். தொழில், வியாபாரம் ஒரே சீராக செல்லும்.
கன்னி கன்னி ராசி நண்பர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பண தட்டுபாடுகள் குறையும்.ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.தெய்வ வழிபாடு சிறக்கும். கணவன் மனைவிடையே விட்டுக்கொடுத்தல் அவசியம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
துலாம் துலாம் ராசி நண்பர்களே, குடும்ப வரவு, செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். தள்ளிப் போன விஷயங்கள் விரைவில் முடியும்.புதிய வாகன யோகம் உண்டு கொடுத்த பணம் வசூல் ஆகும். எதிரிகள் அடிபணிந்து போவர். தொழில், வியாபாரம் எழுச்சி பெரும்
விருச்சிகம் விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப நிதி நிலை உயர்ந்து நிலைமை சீரடையும். நினைத்த காரியம் கைகூடும். முன் கோபத்தை தவிற்பது நல்லது யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். எதிர்ப்புகள் அடங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை
தனுசு தனுசு ராசி நண்பர்களே, எதிர்காலம் சார்ந்த சிந்தனை அதிகமாகும். சொந்த பந்தங்கள் சிலர் உதவி கேட்டு வருவர். தேவையின்றி கடன் வாங்குவதை தவிற்க்கவும்.காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
மகரம் மகர ராசி நண்பபர்களே, மனதில் தெளிவு பெறும். குல தெய்வ வழிபாடு சிறப்பைத்தரும்.உறவினர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கும்பம் கும்ப ராசி நண்பர்களே, யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.சோம்பல் அதிகரிக்கும்.எந்த வேலையாக இருந்தாலும் தள்ளிபோடுவீர்கள். வெளிவட்டார பழக்கம் விரிவடையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.
மீனம் மீன ராசி நண்பர்களே, சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். அண்டை, அயலாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.