இன்றைய ராசி பலன்கள் - (28-01-2025 செவ்வாய்க் கிழமை)

By News Room

மேஷம் மேஷ ராசி நண்பர்களே,தேக்க நிலையில் இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் எதிர்பார்த்தது நடக்கும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்.நீண்ட நாள் முயற்சிகள் கைகூடும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

ரிஷபம் ரிஷப ராசி நண்பர்களே, பிரியமானவர்கள் ஆதரவாக செயல்படுவர். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வாகன பராமரிப்பு செலவு கூடும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.அலைச்சல் அதிகமாக காணப்படும்.சந்திராஷ்டமம் நீடிக்கிறது கவனம்.

மிதுனம் மிதுன ராசி நண்பர்களே, முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். எதிலும் முன்யோசனைவுடன் செயல்படுவது நல்லது. வாகன மாற்றம் ஏற்படும் புது வாகன யோகமும் உண்டு .பண வரவில் சின்ன தடை இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.

கடகம் கடக ராசி நண்பர்களே, எதிரிகளின் தொல்லை சுவடு தெரியாமல் மறையும்.தொழில் போட்டிகள் குறையும். நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வந்து போகும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும்.

சிம்மம் சிம்ம ராசி நண்பர்களே, குடும்ப ஒற்றுமை பலப்படும். கணவன் மனைவிக்குள் இணக்கம் ஏற்படும்.மனவலிமை அதிகரிக்கும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும்.பால்ய நண்பர் சந்திப்பு நிகழும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

கன்னி கன்னி ராசி நண்ர்களே, உங்களால் மற்றவர்கள் பயன்பெறுவர். அடுத்தவர்கள் கருத்துக்கு செவி சாய்க்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

துலாம் துலாம் ராசி நண்ர்களே, மன மகிழ்ச்சி உண்டாகும்.காரிய தடைகள் விலகும். முக்கிய வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.

விருச்சிகம் விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளை தவிர்க்கவும்.சகோதரர்களால் நன்மைகள் உண்டு. தியானத்தால் மனம் நிம்மதி அடையும். முக்கிய தேவைகள் நிறைவேறும். புது தொழில் யோகம் அமையும்.

தனுசு தனுசு ராசி நண்பர்களே,கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்  பெற்றோர்களிடம் அன்யோன்யம் ஏற்படும். உறவினர்களால் ஏற்பட்ட தகராறுகள் அகலும். வாகனத்தில் பொறுமையாக செல்லவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மகரம் மகர ராசி நண்பர்களே, குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உறவினர்களால் நற்செய்தி கிடைக்கும் அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும்.பண விஷயங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் உங்கள் கை ஒங்கும்.

கும்பம் கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். இழுபறியில் இருந்த காரியம் சீக்கிரத்தில் நிறைவேறும். பண தேவைகள் பூர்த்தியாகும்.உடல் சோர்வு நீங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.பழைய வாகனங்கள் சிலவு வைக்கும்.

மீனம் மீன ராசி நண்பர்களே, செய்யும் காரியத்தில் நிதானமும், செயலில் விவேகமும் தேவை. முன் கோபம் ததவிற்க்கவும். பொருளாதார நிலை உயரும். வாகன யோகம் உண்டு. உத்யோத்தில் அலைச்சல் இருக்கும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.

.
மேலும்