வெற்றிலையை ஒருவர் தருவது போல் கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான நற்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது. வளைகாப்பு எந்த மாதத்தில் வைக்கலாம்?
கருவுற்ற பெண்ணின் ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் செய்வது சிறப்பாகும்.
மேலும், இரட்டைப்படை மாதங்களை விடுத்து ஒற்றைப்படை மாதத்தில் செய்யவும்.
புதன் திசை, சுக்கிரன் புத்தி நடந்தால் என்ன பலன்?
சுக்கிரன் பலம் பெற்று திசை நடத்தும்போது, காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வாகன சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான காரியங்கள் கைக்கூடும். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
பல்லி, பாதத்தில் உள்ள விரலில் ஏறினால் என்ன பலன்?
பல்லி, பாதத்தில் உள்ள விரலில் ஏறினால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
நண்பன் கடிதம் கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் வெளியூர் பயணம் தொடர்பான செயல்கள் கைகூடும் என்பதைக் குறிக்கிறது.